தனுஷ்கோடி அருகே கரை ஒதுங்கிய இலங்கை படகு
தனுஷ்கோடி: தனுஷ்கோடி கடலில் கரை ஒதுங்கிய இலங்கை படகு குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராமேஸ்வரம் கடல் பகுதியில் இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல்படை கண்காணிப்பு பணி உள்ளது.
இந்த கண்காணிப்பையும் மீறி படகில் வரும் இலங்கை அகதிகளை நடுக்கடலில் இறக்கிவிடுவதும், மணல் திட்டுகளில் தவிக்க விடுவதும் கடந்த சில மாதங்களாகவே நடைபெற்று வருகிறது.
இதன் மூலம் தனுஷ்கோடி கடல் பகுதியில் பாதுகாப்பு பலவீனமாக உள்ளதாக புலனாய்வு துறை உயர் அதிகாரிகள் மத்தியில் ஒரு கருத்து நிலவி வருகிறது.
இந்த நிலையில், தனுஷ்கோடி அரிச்சல்முனை கடற்கரையில் இருந்த இந்திய கடற்படை செக்போஸ்ட் அகற்றப்பட்டது முதலே இலங்கை படகுகள் வந்து செல்வது அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
சில நாட்களுக்கு முன்பு நடுக்கடலில் தவித்த அகதிகள் படகுக்கு நள்ளிரவில் வந்த இலங்கை படகு பெட்ரோல் கொடுத்து உதவியதாக இலங்கையில் இருந்து தப்பி வந்த அகதிகள் சிலர் தெரிவித்தனர்.
இந்நிலையில் தனுஷ்கோடி கம்பிப்பாடு கடற்கரையில் கரை ஒதுங்கிய ஒரு படகில் இன்ஜின் இல்லை. ஆனால் அந்த படகில் இருந்து இரவு நேரத்தில் பலர் படகிலிருந்து இறங்கி ராமேஸ்வரம் நோக்கி சென்றதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து அந்த இலங்கை படகை இந்திய அதிகாரிகள் கைப்பற்றி அது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications