காதலனுடன் பீச்சுக்கு சென்ற பெண் கடத்தி கற்பழிப்பு
நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் வண்ணான் விளை பகுதியைச் சேர்ந்த பெண் காதலனுடன் கடற்கரைக்குப் போனபோது கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் அந்தப் பெண்ணின் வாக்குமூலத்தில் முரண்பாடுகள் இருப்பதால் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
ஈரோடு மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள சின்னங்காபாளையம் மடக்காட்டுபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கவேல். இவரது மகன் ரமேஷ் (24).
இவர்கள் தற்போது குமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே உள்ள வண்ணான்விளையில் வசித்து வருகிறார்கள். ரமேஷ் வட்டித்தொழில் செய்து வந்தார்.
ரமேசும், ராமன்புதூரைச் சேர்ந்த ராணியும் காதலித்து வந்தனர். கடந்த 15-ந் தேதி மாலை ரமேசும், ராணியும் சொத்தவிளை கடற்கரைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர்.
ஆனால் அதன் பின்னர் ரமேஷ் வீடு திரும்பவில்லை. பல இடங்களில் தேடியும் கண்டு பிடிக்க முடியாததால் ரமேசின் தந்தை தங்கவேல் சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார்.
இதையடுத்து ராணியைப் பிடித்த போலீஸார் அவரிடம் விசாரணை நடத்தினர். 2 நாட்களாக நடத்தப்பட்ட விசாரணையில் ராணி முன்னுக்கு பின் முரணான தகவலை தெரிவித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று திடீரென தன்னை இரண்டு பேர் ரமேஷிடமிருந்து கடத்திச் சென்று கற்பழித்ததாக கூறியதால் போலீஸார் குழப்பமடைந்தனர். இதுகுறித்து அவர் கூறுகையில், எனக்கு தாய், தந்தையர் இல்லை. இதனால் நாகர்கோவில் ராமன்புதூரில் உள்ள எனது அத்தை வீட்டில் வசித்து வருகிறேன். ராமன்புதூரில் உள்ள கம்ப்யூட்டர் மையத்தில் வேலைபார்த்து வந்தபோது ரமேசுடன் எனக்கு பழக்கம் ஏற்பட்டது. அடிக்கடி நாங்கள் செல்போனில் பேசிக் கொள்வோம்.
நான் மார்த்தாண்டத்தில் உள்ள கம்ப்யூட்டர் மையத்தில் பணிபுரிந்து வருகிறேன். கடந்த 15-ந் தேதி ரமேஷ் என்னை சொத்தவிளை பீச்சுக்கு அழைத்தார். மோட்டார் சைக்கிளில் என்னை அழைத்துச் சென்றார். நாங்கள் 2 பேரும் சொத்த விளை கடற்கரைக்கு சென்றோம். அப்போது கடற்கரையில் அவ்வளவாக ஆட்கள் இல்லை.
அங்குள்ள தோட்டத்தில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தோம். அப்போது மோட்டார்சைக்கிளில் 2 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் குண்டாகவும், மற்றொருவர் ஒல்லியாகவும் இருந்தார். அவர்கள் ஆசைக்கு இணங்குமாறு என்னை வற்புறுத்தினார்கள். அப்போது ரமேஷ் ஆவேசம் அடைந்தார். நானும் மறுத்தேன்.
இதனால் ரமேசை அவர்கள் மிரட்டி விரட்டியடித்தனர். பின்னர் அவர்களது மோட்டார்சைக்கிளில் என்னை ஏற்றிச் சென்றனர். நான் தப்பி விடாமல் இருக்க என்னை மோட்டார்சைக்கிளின் நடுவில் வைத்தனர்.
மறைவான இடத்துக்கு கூட்டிச் சென்று அவர்கள் 2 பேரும் என்னை கற்பழித்தனர். நான் அவர்களிடம் இருந்து தப்ப கடுமையாக போராடினேன். ஆனால் அவர்கள் என்னை கற்பழித்து விட்டனர்.
வெளியே சொன்னால் அவமானம் என்று கருதி அங்கிருந்து அழுதபடியே பஸ் ஏறி வீட்டுக்கு வந்தேன். அதன்பிறகு நான் ரமேசை பார்க்கவில்லை. அவர் எங்கு சென்றார், என்ன ஆனார் என்று எனக்கு தெரியாது என்று கூறியுள்ளார் ராணி.
அவர் கூறுவதில் போலீஸாருக்கு முழு நம்பிக்கை வரவில்லை. அவர் உண்மையாகவே கற்பழிக்கப்பட்டாரா அல்லது நாடமாடுகிறாரா என்று போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சொத்தவிளை கடற்கரைப் பகுதிக்கும் சென்று தேடுதல் வேட்டை மற்றும் விசாரணை நடத்தியுள்ளனர்.
தானும், ராணியும், சொத்தவிளை கடற்கரைக்குப் போவதாக ரமேஷ் தனது நண்பர்களிடம் தெரிவித்துள்ளார். எனவே நண்பர்களில் யாராவது, ராணியை கடத்திக் கற்பழித்து விட்டு, ரமேஷை கொன்று விட்டார்களா என்ற கோணத்திலும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
"10 வயது குழந்தையை கொன்னுட்டீயே.." கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு குற்றவாளியை தாக்கிய சக கைதிகள்? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications