அதிமுகவுடன் கூட்டணி: அழைக்கும் சிபிஐ, விரும்பாத சிபிஎம்
சென்னை: அதிமுகவுடன் கூட்டணி சேருவது குறித்து மார்க்சிஸ்ட் தலைவர்களுடன் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் தலைவர் தா.பாண்டியன் ஆலோசனை நடத்தினார். ஆனால், அதிமுகவுடன் கூட்டணிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தரப்பில் ஆர்வம் காட்டப்படவில்லை என்று தெரிகிறது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ஏ.பி, பர்தன் கடந்த புதன்கிழமை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவுடன் கூட்டணி குறித்துப் பேசினார்.
இதையடுத்து சென்னை தியாகராயர் நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இரு கட்சிகளின் மூத்த மாநில நிர்வாகிகளும் சந்தித்துப் பேசினர்.
இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன், மூத்த தலைவர் நல்லக்கண்ணு, செயற்குழு உறுப்பினர் கோபு ஆகியோர் மார்க்சிஸ்ட் அலுவலகம் சென்று, அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் வரதராஜன், மத்திய குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், மாநிலக் குழு உறுப்பினர் செல்வ சிங் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.
ஜெயலலிதாவுடன் பர்தன் நடத்திய பேச்சு குறித்து தா.பாண்டியன் மார்க்சிஸ்ட் தலைவர்களிடம் விளக்கினார். மேலும் அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் சேர வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஆனால், இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விருப்பமி்ல்லை என்று கூறப்படுகிறது. ஜெயலலிதாவுடன் கூட்டணி என்பது தங்களுக்கு கொள்கைரீதியிலேயே ஒத்து வராது என மார்க்சிஸ்ட் தலைவர்கள் கூறியதாகத் தெரிகிறது.
திமுக, அதிமுக இரு கட்சிகளையும் விட்டுவிட்டு தேமுதிகவுடன் கூட்டணி அமைக்கலாம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கருதுவதாகத் தெரிகிறது.
-
எல்லா பிரச்சனைக்கும் நான் காரணமா.. வாடகை பேச்சாளர்கள் இப்ப பேசுங்க.. வரிந்து கட்டிய லீமாரோஸ் -
பனையூருக்கு பறக்கும் ராயப்பேட்டை எக்ஸ்பிரஸ்.. அடுத்தடுத்து தாவும் அதிமுக தலைகள்! சரிந்த ஜெ. கோட்டை! -
என்னப்பா அங்க சத்தம்.. ஆக்ஷனில் இறங்கிய ’ஷா’! சரண்டரான அதிமுக தலைகள்! பஞ்சாயத்து முடிந்தது எப்படி? -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
அதிமுகவில் அடுத்தடுத்து 2 விக்கெட்.. மாஜி எம்எல்ஏக்கள் 2 பேர் தவெகவில் ஐக்கியம்.. யார் இவர்கள்? -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை! -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல்












Click it and Unblock the Notifications