ராமேஸ்வரம்-ராமர் பால கற்கள் சூடான விற்பனை!
ராமேஸ்வரம்: ராமர் பாலம், நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை எழுப்பியுள்ளது ஒரு பக்கம் இருக்கும்போது, ராமேஸ்வரத்தில் 'ராமர் பால கற்கள்' படு சூடாக விற்பனையாகி வருகிறது.
ராமர் பாலம் தொடர்பாக பெரும் சர்ச்சை வெடித்து, சேது சமுத்திரத் திட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்குகளும் தொடரப்பட்டன. இந்த சர்ச்சை முடிவே இல்லாமல் நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில், ராமேஸ்வரத்தில் சத்தமே இல்லாமல் ராமர் பாலத்திலிருந்து எடுக்கப்பட்ட கற்கள் என்று கூறி ஒரு விற்பனை படு சூடாக நடந்து கொண்டிருக்கிறது.
சுற்றுலா கைடுகளும், ஏஜென்டுகளும் பவளப் பாறைக் கற்களைக் காட்டி, இது ராமர் பாலத்திலிருந்து எடுக்கப்பட்ட கற்கள் என்று கூறி நல்ல விலைக்கு விற்று வருகின்றனர்.
ராமரின் வானரப் படைகள் இந்தக் கற்களைக் கொண்டுதான் பாலம் கட்டியதாக கூறி ராமர் பாலக் கற்களை படு கேஷுவலாக விற்று வருகின்றனர்.
ராமேஸ்வரம் கோவிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள், இந்தக் கற்களை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால் உண்மையில் இவை ராமர் பாலக் கற்கள் இல்லையாம். மாறாக, சாதாரண பவளப் பாறைக் கற்கள் என்கிறார் மன்னார் வளைகுடா கடலியல் தேசிய பூங்காவைச் சேர்ந்த ஒரு அதிகாரி.
இதை அறியாத அப்பாவி சுற்றுலாப் பயணிகள், ராமர் பாலக் கற்கள் என்று நம்பி சாதாரண பவளப் பாறைக் கற்களை வாங்கிச் செல்கின்றனர் என்றும் அவர் வேதனைப்படுகிறார்.
பவளப் பாறைகள் கடலின் சுற்றுச்சூழலுக்கு மிகவும் முக்கியமானது என்பதால் இவற்றை சேதப்படுத்தவோ, எடுத்து விற்கவோ தடை உள்ளது. ஆனால் அதை மீறி சிலர் இவ்வாறு பவளப் பாறைகளை ராமர் பாலக் கல் என்று கூறி விற்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இருப்பினும் இதுவரை இந்த விற்பனையைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சீதை தீர்த்தம், ராமர் தீர்த்தம், லட்சுமண் தீர்த்தம், ராமர் தீர்த்தம், காந்தமான பர்வம் மற்றும் ராமேஸ்வரத்தில் உள்ள ஒரு ஆசிரமத்தில், இந்த ராமர் பால கல் விற்பனை ஜோராக நடந்து வருகிறது.
கல்லின் விலை ரூ. 500 முதல் ரூ. 1000 வரை வைத்து விற்கின்றனர்.
இதுகுறித்து கோபிநாதன் என்கிற சுற்றுலா கைடு கூறுகையில், ஒரு கல்லை விற்றால் அதன் மூலம் எங்களுக்குக் கமிஷன் கிடைக்கும். இங்கு வரும் விஐபிக்களுக்கு கூட இதை பரிசாக அளிக்கிறார்கள். இதை வீட்டில் வைத்தால் நல்லது என்பதால் விஐபிக்களும் தவறாமல் வாங்கிச் செல்கின்றனர் என்கிறார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications