முதலிடத்தில் சன் டிவி: லயோலா கல்லூரி சர்வே

லயோலா கல்லூரியின் ஊடக அறிவியல் துறை இதுதொடர்பான கருத்துக் கணிப்பை சமீபத்தில் நடத்தியது. அதன் முடிவுகளை துறைத் தலைவர் பேராசிரியர் ராஜமாணிக்கம் செய்தியாளர்களிடம் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறுகையில், மாநிலம் மொத்தம் 3,025 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டது. அனைவரும் 18 வயதுக்கு மேற்பட்டவர்கள்.
கடந்த 2 மாதங்களாக இந்த சர்வே நடத்தப்பட்டது. இந்தக் கருத்துக் கணிப்பில், பெரும்பாலான மக்களின் விருப்ப சானலாக, பெரும்பாலானோர் பார்க்கும் சானலாக சன் குழுமச் சானல்கள் திகழ்கின்றன.
இதில் சன் டிவிக்கு 51 சதவீதம் பேரின் ஆதரவு கிடைத்துள்ளது. 2வது இடத்தில் கலைஞர் டிவி உள்ளது. இதற்கு 8.6 சதவீத ஆதரவு கிடைத்துள்ளது.
சன் குழுமத்தின் கே டிவி (7.5%), விஜய் டிவி (6.4%), பொதிகை (5.7%), சன் மியூசிக் (4.3%), ஜெயா டிவி (4.2%), சன் நியூஸ் (2.6%), மக்கள் டிவி (1.1%) என்ற வரிசையில் உள்ளன.
கருத்துக் கணிப்பில் கலந்து கொண்டவர்களில் அனைத்து அரசியல் கட்சிகளின் தொண்டர்களும் அடக்கம்.
சன் டிவியின் படைப்புகள், வித்தியாசமான நிகழ்ச்சிகள், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் தங்களைக் கவர்ந்திருப்பதாக பெரும்பாலானவர்கள் தெரிவித்தனர் என்றார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications