எம்.எஸ். அலுவாலியாவுக்கு சிறந்த சீக்கியர் -2008 விருது

Subscribe to Oneindia Tamil

Ahluwalia
லண்டன்: மத்திய திட்டக் கமிஷன் துணைத் தலைவர் எம்.எஸ். அலுவாலியாவுக்கு சிறந்த சீக்கியர் -2008 விருது வழங்கப்பட்டுள்ளது.

நவீன இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்பான முறையில் பங்காற்றியதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது.

லண்டனின், லிங்கன் இன் ஹோட்டலின் கிரேட் ஹாலில் நடந்த வண்ணமிகு நிகழ்ச்சியில், அலுவாலியாவுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

உலக வங்கியில் பணியாற்றிய அனுபவம் உடைய அலுவாலியா, திட்டக் கமிஷன் துணைத் தலைவராக இருந்து வருகிறார். ஏற்கனவே அவர் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கு சிறப்பாக பாடுபட்டமைக்காக லோக் மான்ய திலக் புரஸ்கார் விருதினையும் பெற்றுள்ளார்.

நிகழ்ச்சியில் அலுவாலியா பேசுகையில், இந்த பெருமை மிகு விருதினைப் பெறுவதை கெளரவமாக கருதுகிறேன். மேலும், லிங்கன் இன் அரங்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியி்ல் கலந்து கொள்வதையும் பெருமையாக கருதுகிறேன்.

மேலும் இந்தியாவைச் சேர்ந்த ஒருவருக்கு இந்த விருது வழங்கப்பட்டிருப்பது சிறப்பானது. உலக அளவில் இந்தியாவின் பொருளாதார நிலையை உயர்த்தியதில் எனது பங்கு மிகச் சிறியதுதான்.

1991ம் ஆண்டு பிரதமர் மன்மோகன் சிங் நிதியமைச்சராக இருந்தபோது தொடங்கிய துணிச்சலான நடவடிக்கைகள்தான் இந்தியாவின் இன்றைய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய காரணம் என்றார் அலுவாலியா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+