சிதம்பரத்திற்கு ஆணவம் அதிகம் - யஷ்வந்த் சின்ஹா விளாசல்
டெல்லி: நிதியமைச்சர் ப. சிதம்பரம் ஆணவம் பிடித்தவர். அவரிடம் நாட்டின் பொருளாதார நிலை குறித்த உண்மையான தகவல்களை எதிர்பார்க்க முடியாது. காரணம் அவரிடம் எப்போதுமே நேர்மை இருந்த்தில்லை என்கிறார் முன்னாள் நிதியமைச்சரும், பாஜக தலைவர்களில் ஒருவருமான யஷ்வந்த் சின்ஹா.
முன்னணி தொழிலதிபர்கள் 15 பேரை பாஜகவின் பிரதமர் வேட்பாளர் அத்வானி சந்தித்து பேசியது நினைவிருக்கும். நாட்டின் பொருளாதார நிலை குறித்தும், சர்வதேச அளவில் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடி மற்றும் அதன் இந்திய பாதிப்புக் குறித்தும் அவர்களிடம் விவாதித்தார்.
இந்தச் சந்திப்பு குறித்து நிதியமைச்சர் சிதம்பரத்திடம் பின்னர் கருத்து கேட்கப்பட்டது.
அதற்கு அவர், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்ட ஜான் மெக்கைன் போன்றவர்தான் அத்வானி. மெக்கைனுக்கு பொருளாதாரம் பற்றி எதுவும் தெரியாது. அத்வானிக்கும் ஒன்றும் தெரியாது, தெரிந்து கொள்ள வேண்டும் என்று அத்வானி ஆசைப்பட்டால், அதை பற்றி எனக்கு ஆட்சேபனை இல்லை, என்றார் கிண்டலாக.
இதற்கு யஷ்வந்த் சின்ஹா கண்டனம் தெரிவித்துள்ளார். டெல்லியில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், உண்மையில் நாட்டின் பொருளாதாரம் பற்றித் தெரியாதவர் சிதம்பரம்தான். விவசாயிகளின் விரோதி அவர்.
அதனால்தான் நாட்டின் பொருளாதார நிலை குறித்து தவறான தகவல்களைத் தருகிறார்.
அவரிடம் நேர்மை கிடையாது. அதனால் உண்மையான தகவல்களை அவரிடமிருந்து எதிர்பார்க்கவும் முடியாது. அவர் ஆணவம் பிடித்தவர். அவருக்கு அத்வானியை பற்றிப் பேச எந்த தகுதியும் இல்லை என்றார் காட்டமாக.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications