பழைய வழக்குகளில் தொடர்புடைய 4 சட்ட மாணவர்கள் கைது

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த 12ம் தேதிக்கு முன்பு சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த பல்வேறு மோதல்களில் தொடர்புடைய 4 சட்டக் கல்லூரி மாணவர்களை போலீஸார் கைது செய்தனர்.

கடந்த 12ம் தேதி சென்னை சட்டக் கல்லூரியில் நடந்த மோசமான வன்முறைச் சம்பவம் தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து மாணவர்களை அடுத்தடுத்துக் கைது செய்து வருகின்றனர். சிலர் சரணடைந்துள்ளனர்.

இந்த நிலையில் இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், அந்த சம்பவத்திற்கு முன்பு நடந்த மோதல்கள் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்ட மாணவர்களையும் கைது செய்யுமாறு போலீஸாருக்கு உத்தரவிட்டது.

இதையடுத்து பழைய வழக்குகளில் தொடர்புடைய மாணவர்களையும் போலீஸார் கைது செய்யத் தொடங்கியுள்ளனர்.

கடந்த ஆகஸ்ட் 3ம் தேதி திலீபன் என்ற 3ம் ஆண்டு மாணவரை, ஐந்தாம் ஆண்டு படித்த மாணவர்கள் ராகிங் செய்து அடித்து சித்திரவதை செய்தனர். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, பெருமாள், சதீஷ் குமார், அப்துல் சலீம், ராஜாராமன் ஆகிய நான்கு பேரையும் செங்கல்பட்டில் வைத்து போலீஸார் கைது செய்தனர்.

நால்வரும் ஜார்ஜ்டவுன் நீதிமன்றத்தி்ல ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

மேலும் சில மாணவர்களையும் பழைய வழக்குகள் தொடர்பாக போலீஸார் தேடி வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+