கூடங்குளம் பஞ்சாயத்துத் தலைவி நீக்கத்திற்கு இடைக்கால தடை
மதுரை: நெல்லையில் எம்.எல்.ஏ. தூண்டுதலின் பேரில் பஞ்சாயத்து தலைவி பதவியை மாவட்ட கலெக்டர் பறித்துள்ளதாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் கூடங்குளம் பஞ்சாயத்து தலைவி வழக்கு தொடுத்துள்ளார். இந்த உத்தரவுக்கு மதுரை உயர்நீதிமன்றக் கிளை இடைக்காலத் தடை விதித்துள்ளது.
திருநெல்வேலி மாவட்டம், கூடங்குளம் பஞ்சாயத்து தலைவியாக இருப்பவர் எழில் அரசி. இவர் சென்னை உயர் நீதி மன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில் கூறியுள்ளதாவது:
கூடங்குளத்திற்கு அணு உலை வந்தால் அந்த பகுதி மக்களுக்கு மறைமுக வேலை வாய்ப்பு கிடைக்கும். இதனால் அவர்களின் பொருளாதாரம் உயரும். அடிப்படை வதிகள் கிடைக்கும் வாய்ப்பு ஏற்படும்.
எனது இந்த முயற்சிக்கு கிராம சபை கூட்டத்தில் ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளது. பஞ்சாயத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், நான் அதிமுகவைச் சேர்ந்தவள் என்பதால் ராதாபுரம் எம்.எல்.ஏ. அப்பாவு தூண்டுலின் பேரில் என்னை கடந்த 09.09.2008 அன்று மாவட்ட கலெக்டர் பதவி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
நெல்லை கலெக்டரின் இந்த உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நீதிபதி ராஜசூர்யா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி, நெல்லை கலெக்டர் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தார்.












Click it and Unblock the Notifications