தமிழகத்தில் கன மழை: ஆறுகளில் வெள்ளப் பெருக்கு - கடல் கொந்தளிப்பு

வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை தொடர்ந்து அதே இடத்தில் வலுப்பெற்று நிலை கொண்டுள்ளது. இதனால் தமிழக கடலோர மாவட்டங்களில் கன மழை பெய்து வருகிறது.
இன்னும் 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலோரங்களில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் பலத்த மழை முதல் மிக பலத்த மழை வரை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நேற்று முதல் நல்ல மழை பெய்து வருகிறது. விட்டு விட்டு மழை பெய்து வருவதால் சாலைகள் வெள்ளக்காடாகியுள்ளன. பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியிருப்பதால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வாகனங்கள் செல்வதில் பெரும் சிரமம் காணப்பட்டது.
திருவொற்றியூரில் கடல் கொந்தளிப்புடன் காணப்பட்டது. இதனால் மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை.
நெல்லையில் பலத்த மழை
நெல்லை மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. நெல்லையிலும், பாளையங்கோட்டையிலும் விடிய விடிய மழை பெய்ததால் இரு நகரங்களும் வெள்ளக்காடாகின.
தொடர் மழை காரணமாக அணைகளில் நீர்மட்டம் உயர்ந்தபடி இருக்கிறது. ஸ்ரீவைகுண்டம் அணையில், அணையைத் தாண்டி வெள்ளம் போய்க் கொண்டிருக்கிறது.
தாமிரபரணி ஆற்றிலும் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. குறுக்குத்துறை சுப்ரமணிய சுவாசமி கோவிலை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் உற்சவர் சிலை வெள்ளத்தில் சிக்கிக் கொண்டுள்ளது.
குற்றாலத்தில் உள்ள அருவிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. பேரிரைச்சலுடன் அங்கு தண்ணீர் கொட்டி வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்திலும் கன மழை பெய்து வருவதால் உப்பு உற்பத்தி கடும் பாதிப்பை சந்தித்துள்ளது. ஏற்கனவே பொருளாதார நெருக்கடியால் உப்புத் தொழில் மந்த நிலையில் இருந்து வருகிறது. இப்போது கன மழை பெய்வதால் உப்பு உற்பத்தியாளர்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
கன்னியாகுமரி மாவட்டத்திலும் தொடர்ந்து கன மழை பெய்து வருவதால் அங்குள்ள அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.
ராமேஸ்வரத்தில் கடல் கொந்தளி்ப்பு
கன மழை காரணமாக ராமேஸ்வரத்தில் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் பாம்பன் பாலத்தில் ரயில்கள் மிகவும் மெதுவாக இயக்கப்படுகின்றன.
ரயில் பாலத்தைத் தொட்டுக் கொண்டு கடல் நீர் போவதால் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது. பலத்த காற்றும் வீசியதால் ராட்சத அலைகளும் எழுந்தவண்ணம் இருந்தன.
பாம்பன், தனுஷ்கோடி பகுதிகளில் கடல் கொந்தளிப்பு அதிகம் காணப்பட்டதால், தனுஷ்கோடிக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
அக்னிதீர்த்த கடல் பகுதி அமைதியான பகுதியாக கூறப்படும். ஆனால் அங்கும் நேற்று கடல் கொந்தளித்துக் காணப்பட்டது.
காவிரி டெல்டா மாவட்டங்கள் ..
தஞ்சை, நாகை, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களிலும் தொடர்ந்து நல்ல மழை பெய்து வருகிறது. தொடர்ந்து நான்கு நாட்களாக அங்கு மழை பெய்து வருகிறது.
இதே போல வேலூர், திருச்சி, கொடைக்கானல், கோவை, நீலகிரி உள்ளிட்ட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளிலும் நல்ல மழை பெய்துள்ளது. தொடர்ந்து பல பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
புதுச்சேரியிலும் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.
-
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
சென்னை உட்பட.. 25 மாவட்டங்களுக்கு பறந்த மழை அலர்ட்! அடுத்த 3 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. ரூட்டை மாற்றிய மழை! 16 மாவட்டங்களுக்கு வார்னிங்.. உஷார் மக்களே! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
Chennai Rain: சென்னையில் இன்று விட்டு விளாசப் போகுது! இனி ஒரு வாரத்துக்கு கனமழை தான்.. வானிலை மையம் எச்சரிக்கை! -
ஏற்கனவே அவிஞ்சு போய் கிடக்கு.. மேற்கொண்டு வெறியைக் கிளப்பும் எல்-நினோ! ஆகஸ்ட் வரை வெயில் தானாம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications