குற்றத் தடுப்பு வழக்கு கோர்ட்டில் இன்று பிரக்யா ஆஜர்
மும்பை: மாலேகான் குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள பிரக்யா சிங் தாக்கூர், லெப்டினென்ட் கர்னல் பிரசாத் புரோஹித் உள்ளிட்ட 9 பேரும் மகாராஷ்டிர குற்றத் தடுப்புச் சட்ட தனி நீதிமன்றத்தில் (எம்.சி.ஓ.சி.ஏ) ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் மிகக் கடுமையான சட்டம்தான் எம்.சி.ஓ.சி.ஏ. சமீபத்தில் பிரக்யா உள்ளிட்ட 9 பேர் மீது இந்த சட்டத்தைப் பிரயோகித்தது தீவிரவாதத் தடுப்புப் பிரிவு போலீஸ்.
இதையடுத்து இந்த சட்டத்தின் கீழ் இவர்களைக் கைது செய்வது தொடர்பாக எம்.சி.ஓ.சி.ஏ கோர்ட்டில் அனுமதி கோரி போலீஸ் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவைப் பரிசீலித்த நீதிபதி ஒய்.டி.ஷிண்டே, பிரக்யா, புரோஹித், ஷாம்லால் சாஹு, சிவநாராயணன் சிங், அஜய் ரகீர்கர், ஜெகதீஷ் மாத்ரே, ராகேஷ் தவதே, சமீர் குல்கர்னி மற்றும் ரமேஷ் உபாத்யாய் ஆகியோரை நேரில் ஆஜர்படுத்துமாறு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து இன்று அவர்கள் 9 பேரும் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
மாலேகான் குண்டுவெடிப்பில் இதுவரை 11 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications