2.5 லட்சம் அமெரிக்கருக்கு வேலை: ஓபாமா உறுதி
வாஷிங்டன்: அடுத்த மூன்று ஆண்டுகளில் 2.5 லட்சம் அமெரிக்கர்களுக்கு வேலைவாய்ப்பு தரும் வகையில் புதிய திட்டம் ஒன்றைத் தயார் செய்துள்ளதாக பராக் ஓபாமா தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிபராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஓபாமா ஜனவரி 20ம் தேதி பொறுப்பேற்கவுள்ளார்.
அமெரிக்காவின் வீட்டு வசதி துறை, நிதித்துறை, வங்கி செயல்பாடுகள் ஆகியவை பொருளாதாரத்தை மிகவும் பாதித்துள்ளது. வரலாறு காணாத வேலையிழப்புகள், தற்கொலைகள் நிகழ்ந்தவண்ணம் உள்ளன. தொடர்ந்து 22 வங்கிகள் திவாலாகியுள்ளன.
இந்த நெருக்கடி 2009-10 ஆண்டுகளில் முழுமையாகத் தொடரும் என எச்சரித்துள்ளனர் பொருளாதார நிபுணர்கள்.
இதை நன்கு உணர்ந்துள்ள ஓபாமா, இப்போதே அதற்கேற்ப முன்னேற்பாட்டுத் திட்டங்களில் இறங்கியுள்ளார்.
2.5 லட்சம் அமெரிக்கர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் திட்டம் வகுத்துள்ளார்.
இதில் சாலைகள் போடுவது, பாலங்கள் அமைத்தல், பள்ளிகளை நவீனப்படுத்துவது, மாற்று எரிபொருள்களை உருவாக்குவது, அதிக மைலேஜ் தரும் திறனுள்ள கார்களை உருவாக்குவது என ஏராளமான விஷயங்கள் இடம்பெற்றுள்ளன.
இதைத் தவிர உள்நாட்டினருக்கு அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும் நிறுவனங்களுக்கு வரி சலுகையும், வேலைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் நிறுவனங்களுக்கு அதிக வரிச் சுமை என்ற தி்ட்டமும் அடங்கும் (இது தான் இந்தியாவை திக்.. திக்.. அடைய வைத்துள்ளது.)
'இவை உடனடியாக இப்போதைய நெருக்கடியைத் தீர்க்க உதவாது என்றாலும், நீண்ட கால அடிப்படையிலான நல்ல முதலீடுகள். இவற்றை உரிய நேரத்தில் சரியாகச் செய்து வந்தாலே போதும் நாடு அடிக்கடி மந்த நிலைக்குத் தாவுவது நிற்கும்' என்று குறிப்பிட்டுள்ளார் ஓபாமா.
இப்போது அமெரிக்கா சந்தித்துக் கொண்டிருக்கும் சிக்கல்களைச் சந்திக்க தமது திட்டங்கள் போதுமானவை என்றும் தெரிவித்துள்ளார் ஓபாமா.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications