இதயத்தில் துளை... சிறுமி திவ்யதர்ஷிணிக்கு உதவ!
உங்கள் தட்ஸ்தமிழில் 23.11.2008 அன்று சிறுமி திவ்யதர்ஷிணி குறித்த செய்தி வெளியானது.
(இதயத்தில் ஓட்டை: சிகிச்சைக்குப் பணமில்லை - உதவிக்கு ஏங்கும் சிறுமி)
அது முதல் எப்போதும் உதவத் தயாராக இருக்கும் நமது நல்லிதயம் படைத்த தட்ஸ்தமிழ் வாசகர்கள் இந்த சிறுமிக்கும் உதவிக் கரம் நீட்டத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
பலரும் இந்தச் சிறுமியின் முகவரியைக் கேட்டு நம்மை மெயில் மூலம் தொடர்பு கொண்டுள்ளனர்.
அவர்களுக்காக சிறுமி குறித்த முழுத் தகவல்களும், அவரது முகவரியையும் இங்கே அளிக்கிறோம்.
குடும்பப் பின்னணி ..
புதுக்கோட்டை அருகே உள்ள பொன்னமரவாதியை பூர்வீகமாக கொண்டவர் லதா. இவருக்கு சென்னையைச் சேர்ந்த ராசா என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
மகிழ்ச்சியாக சென்ற மண வாழ்க்கையின் அத்தாட்சியாக ராசா-லாதா தம்பதிக்கு திவியதர்ஷிணி (4), விக்னேஸ்வரி (3) என்ற இரண்டு குழந்தைகள் பிறந்தனர்.
மண வாழ்க்கையில், ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ராசாவும், லதாவும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இரு குழந்தைகளுடன் தனிமையில் வாழ்க்கை நடத்த முடியாமல் போராடிய லதா, தனது பெற்றோரின் நிழலை நாடி நின்றார்.
பெற்ற மகளை கைவிட மனம் இல்லாத அன்னை அரவணைத்துக் கொண்டார். இதனால் பிறந்த வீட்டிற்கு மீண்டும் திரும்பினார் லதா. அன்று முதல் இன்று வரை அவர்களது பாதுகாப்பில் வாழந்து வருகிறார்.
குழந்தைகளை கரை சேர்க்கவும், குடும்பத்தை பராமரிக்கவும் திருச்சி உறையூரில் உள்ள ஒரு மருந்துக் கடையில் தற்போது பணியாற்றி வருகிறார் லதா.
தி்வ்யதர்ஷிணிக்கு என்ன பிரச்சினை?:
திவ்யதர்ஷிணிக்கு அடிக்கடி சளி பிடித்த வண்ணம் இருந்தது. இதனால் அருகில் உள்ள டாக்டரிடம் காட்டி பரிசோதனை செய்த போது அவருக்கு இதயத்தில் ஓட்டை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் உடனடியாக ASD CLOSURE SURGERY என்ற அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்திதுள்ளனர்.
எவ்வளவு செலவாகும் ..?:
இந்த சிகிச்சைக்கு ரூ 1,05,000 தேவைப்படுகிறதாம். மேலும் தொடர் மருந்து எடுத்துக் கொள்ள ரூ 50,000 வரை ஆகுமாம்.
வேலைக்கு சென்றால் தான் அடுத்த வேலை உணவு என்ற நிலையில் உள்ள லதாவுக்கு லட்ச ரூபாய் செலவில் எப்படி வைத்தியம் பார்ப்பது என்று அதிர்ச்சியாகி விட்டது.
மகளின் உயிருக்கு குறிவைத்துள்ள அந்த நோயை விரட்ட அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் உதவி கோரியுள்ளார். அதே போன்று உற்றார் உறவினர்களிடமும் உதவி கோரியுள்ளார். ஆனால் சென்ற இடமெல்லாம் ஏமாற்றமே மிஞ்சியது.
இந்த நிலையில் தான் நமது தட்ஸ்தமிழில் சிறுமி திவ்யதர்ஷிணி குறித்து செய்தி வெளியிட்டோம். ஏராளமான வாசகர்கள் அவரது மேல் விவரம், முகவரி, உதவுவது எப்படி என்று கேட்ட மெயில்கள் அனுப்பியுள்ளனர்.
சிறுமியின் முகவரி:
திவ்வியதர்ஷிணிக்கு உதவ விரும்புவோர் இந்த முகவரியைத் தொடர்பு கொள்ளலாம்.
R.Divya Darshini
D/O R. Latha,
No- 2/1, Sakthi Nagar 7th cross,
Karu Mandapam,
Trichy- 620 001
Tamil Nadu
Contact Number - 99945 66506













Click it and Unblock the Notifications