தலித்துகளுக்கு மறுக்கப்படும் உயர் பதவிகள்-சிவகாமி

அவருக்கு அந்தக் கட்சியில் மூத்த பொதுச் செயலர் பதவி வழங்கப்பட்டுள்ளது. சிந்தனையாளரும், எழுத்தாளருமான சிவகாமி பெண்கள் முன்னணி என்ற அமைப்பை நடத்தி வந்தார்.
யாருக்கும் தலை வணங்காக நேர்மையான ஐஏஎஸ் அதிகாரி என பெயரெடுத்தவர். இதனால், இவரை திமுக, அதிமுக ஆகிய இரு ஆட்சிகளுமே ஒதுக்கியே வைத்தன. குறிப்பாக ஜெயலலிதாவி்ன் ஆட்சியில் இவர் ரொம்பமே ஒடுக்கப்பட்டார்.
இந் நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்தார். சென்னை தியாகராயர் நகரில் நடந்த நிகழ்ச்சியில் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலர் சுரேஷ் மானே முன்னிலையில் அதில் சேர்ந்தார் சிவகாமி.
இதி்ல் கட்சியின் மாநிலத் தலைவரும் விடுதலைச் சிறுத்தைகளில் இருந்து பிரிந்து வந்தவருமான செல்வப் பெருந்தகை, மாநில ஒருங்கிணைப்பாளர் ஆம்ஸ்ட்ராங் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் சிவகாமி பேசுகையி்ல்,
இந்திய ஆட்சிப் பணியில் 29 ஆண்டு பணிபுரிந்து பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்துள்ளேன்.
ஐஏஎஸ் படித்தாலும் கூட தமிழகத்தில் தலித்துகளுக்கு உயர் பதவிகள் மறுக்கப்படுகின்றன. உள்துறை, நிதி்த்துறைச் செயலாளர் போன்ற பதவிகளில் தலித்கள் நியமி்க்கப்படுவதில்லை.
தலித்கள் மேம்பாட்டுக்காக பட்ஜெட்டில் 18 சதவீத நிதி ஒதுக்கப்பட வேண்டும் என்பது சட்டம். ஆனால், அவ்வளவு நிதி ஒதுக்கப்படுவதே இல்லை. மேலும் தலித்கள் மேம்பாட்டுக்காக ஒதுக்கப்படும் நிதி கூட மற்ற பணிகளுக்குத் திருப்பிவிடப்பட்டு விடுகின்றன.
ஒடுக்கப்பட்ட சமூகம், பாதிக்கப்பட்ட பெண்கள், அரவாணிகளோடு பணிபுரிந்துள்ளேன். அதிகார வர்க்கத்தில் இருந்து இனி நான் சுதந்திரமாக செயல்படலாம். எத்தனையோ கட்சிகள் இருக்கும் நிலையில், பிஎஸ்பியில் சேர்ந்தது ஏன் என்று கேட்பார்கள். இந்தக் கட்சி சுதந்திரம், ஜனநாயகம், சமத்துவம் ஆகியவற்றைப் பின்பற்றி அம்பேத்கர் கொள்கைப்படி நடந்து வருகிறது.
மேலும், என் கொள்கைக்கும் மதிப்பளிக்கும் கட்சி என்பதால் இதில் இணைந்துள்ளேன். மாயாவதி தலைமையில் பணியாற்றுவதை பாக்கியமாக கருதுகிறேன் என்றார் சிவகாமி.
வரும் மக்களவைத் தேர்தலில் சிவகாமி போட்டியிடவுள்ளார். இதற்கிடையே வரும் டிசம்பர் 22ம் தேதி மாயாவதி தமிழகம் வருகிறார்.
-
செந்தில் பாலாஜி கைதாகிறாரா? தவெக கடிதத்திற்கு ஓகே சொன்ன ஆளுநர்! மறுபடியும் முதல்ல இருந்தா? -
திமுகவை சீண்டும் துரை வைகோ.. இன்னைக்கு என்ன சொல்லி இருக்காருன்னு பாருங்க! புது பஞ்சாயத்து -
2031 வரை அண்ணாமலை காத்திருக்க மாட்டார்.. அவரின் உண்மையான திட்டம் இதுதான்.. வெளியான தகவல்! -
Vetri Payanam: கன்னியாகுமரி டூ சென்னை வரை பெண்களுக்கு இலவச பஸ் பயணம்! அறிவிக்கிறாரா முதல்வர் விஜய்? -
அண்ணாமலையின் மூவ்! ஒன்னும் புதுசா இல்லை.. பாஜகவின் இன்னொரு கிளைதான்! கிளம்பும் விமர்சனம்! -
2020-ல் ரஜினி தொடங்கவிருந்த கட்சியில் இணையுமாறு கேட்டார்! நான் மறுத்துவிட்டேன்! அண்ணாமலை பரபரப்பு -
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
பேய் மழை வெளுக்கப் போகுது.. கோவை, நீலகிரியில் மிக கனமழை! 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை! -
கோவை, நீலகிரியில்.. கன முதல் மிக கனமழை பெய்யும்! மொத்தம் 11 மாவட்டங்களுக்கு வார்னிங்! -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
நீல நிறமாக மாறிய.. 3 மாத பச்சிளம் குழந்தையின் உடல்! உயிரை காப்பாற்ற உடனே உதவுங்கள்!












Click it and Unblock the Notifications