நரிமன் ஹோட்டல்-யூதர்களுக்கு குறி வைத்த தீவிரவாதிகள்
அங்கு 5வது மாடியில் மேலும் பல தீவிரவாதிகள் பிணயக் கைதிகளுடன் பதுங்கியுள்ளனர். இவர்களை என்எஸ்ஜி கமாண்டோக்கள் தாக்கி வருகின்றனர்.
நரிமன் ஹவுஸ் என்பது மும்பையில் வசிக்கும் ஹசிதிக் யூத இனத்தின் சபாத்-லுவாவிட்ஸ் பிரிவினரின் (Chabad-Lubavitch movement of Hasidic Jews) தலைமையகமாகும்.
5 மாடிக்கள் கொண்ட இந்தக் கட்டடத்தில் சுமார் 15 யூதர்கள் தீவிரவாதிகளிடம் பிணயக் கைதிகளாக சிக்கியுள்ளதாகத் தெரிகிறது. இவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்ரேலிய குடியுரிமையும் உள்ளவர்கள்.
இங்கு தீவிரவாதிகள் 2வது மாடியிலும் 3வது மாடியிலுமாகப் பிரிந்து பிணயக் கைதிகளை பிடித்து வைத்திருந்தனர்.
இந்தத் தீவிரவாதிகள் மீது நேற்றிரவு முழுவதும் வெளியில் இருந்தும் உள்ளே புகுந்தும் கமாண்டோக்கள் தாக்குதல் நடத்தினர். ஆனால், தீவிரவாதிகள் பிணயக் கைதிகளுடன் அந்த கட்டடத்துக்குள் இடம் மாறிக் கொண்டே இருந்தனர்.
இந் நிலையில் இன்று காலை8.45 மணியளவில்20 கமாண்டோக்கள் ஹெலிகாப்டர்கள் மூலம் அந்த ஹோட்டலின் மாடியில் குதித்து உள்ளே புகுந்தனர்.
ஆனால் மாலை வரை இந்த ஆபரேசன் நீடித்தது. நெடுநேரமாக தீவிரவாதிகளை வெளியேற்ற முடியாததால் அவர்கள் மீது போலீசார் ராக்கெட் குண்டுகளை வீசி நிலை குலைய வைத்து பின்னர் கமாண்டோக்கள் மாலையில் உள்ளே புகுந்தனர்.
அங்கே இரண்டாவது மாடியில் 3 பிணயக் கைதிகளின் உடல்கள் கிடந்தன. இவர்களை சுட்டுக் கொன்றுவிட்டு தீவிரவாதிகள் 4வது மாடிக்கு சென்றுவிட்டனர்.
இதையடுத்து 4வது மாடிக்குச் சென்ற கமாண்டோக்கள் அங்கிருந்த 2 தீவிரவாதிகளை சுட்டுக் கொன்றனர். அங்கு தீவிரவாதிகளால் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டு அவர்களது உடல்கள் கிடந்தன.
இப்போது தீவிரவாதிகள் 5வடி மாடியில் பிணயக் கைதிகளுடன் பதுங்கியுள்ளனர். இங்கு 6 தீவிரவாதிகளிடம் வரை உள்ளதாகத் தெரிகிறது. அவர்களிடம் ஏராளமான ஆயுதங்கள் உள்ளன. அவர்கள் பிணயக் கைதிகளை மனித கேடயங்களாகப் பயன்படுத்தி வருவதால் கமாண்டோக்கள் மிக ஜாக்கிரதையாக தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
அந்த கட்டடம் அமைந்துள்ள இடம் மிகக் குறுகலான இடம் ஆகும். ஏராளமான மின் கம்பங்கள், சுற்றிலும் மாடிகள் அமைந்துள்ள இந்த இடத்தில் ஹெலிகாப்டர்களை இயக்குவதிலும் பெரும் சிக்கல் ஏற்பட்டது. ஆனாலும் மிகத் திறமையாக குறுகலான சந்து வழியே ஹெலிகாப்டரை இயக்கி நரிமன் ஹவுசின் மேல் கமாண்டோக்களை இறக்கினார் எம்.ஐ-15 ஹெலிகாப்டரின் விங் கமாண்டர்.
இதற்கிடையே அந்த கட்டத்தில் இருந்த ஒரு முதிய பெண்ணையும் அவரது பேரனையும் தீவிரவாதிகள் காலையில் விடுவிடுத்தனர். இந்த சிறுவனின் தாய்-தந்தை உள்ளே பிணயக் கைதிகளாக உள்ளனர். இதில் சிறுவனின் தாய் மயங்கிக் கிடப்பதாக வெளியே வந்த முதிய பெண் கூறியுள்ளார்.
-
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
இந்தியா பக்கம் வீசும் காத்து.. சீனாவுக்கு செக் வைக்க சரியான ஆள் கிடைச்சாச்சு! உற்று நோக்கும் உலகம் -
கிட்டத்தட்ட ரூ. 25 குறைவு! ஆனால் தப்பி தவறியும் "இந்த" பெட்ரோலை உங்க காரில் போடாதீங்க! ஏன் தெரியுமா -
சரமாரியாக வந்த கேள்வி.. ஒரு நொடி ஸ்டன் ஆன ராகுல்.. "இந்தியா" ஆலோசனை கூட்டத்தில் நடந்தது என்ன? -
வெடித்து சிதறிய இரும்பு குழம்பு.. 8 தொழிலாளர்கள் மரணம்.. விசாகப்பட்டினம் ஸ்டீல் ஆலையில் பயங்கரம்! -
3 ஓவரில் 3 விக்கெட், 34 பந்துகளில் 66 ரன்கள்.. சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் ருத்ரதாண்டவம்! -
"வயிற்றுப்போக்கில் வரும் ரத்தம்.." கேரளாவில் உயிரை குடிக்கும் நோய்.. அதிர வைக்கும் ஷிகெல்லா பாதிப்பு -
துபாயில் கோர விபத்து.. இந்தியர்கள் துடிதுடித்து மரணம்.. நொடியில் நேர்ந்த பயங்கரம்.. என்ன நடந்தது? -
40 ஆண்டுகளில் இல்லாத மாற்றம்.. ரயில் புக்கிங் மொத்தமாக மாற போகுது.. 60 நாட்களில் வரும் இன்ப செய்தி -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு!













Click it and Unblock the Notifications