அத்வானி தந்த 'எக்ஸ்ட்ரா' தொல்லை

Subscribe to Oneindia Tamil

மும்பை: மும்பை தீவிரவாதிகள் தாக்குதலால் காயமடைந்து மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, பாஜக தலைவர் அத்வானி ஆகியோர் நேற்றிரவு நேரில் சந்தித்து ஆறுதல் கூறினர்.

ஜேஜே ஹாஸ்பிடலில் சோனியாவும் பிரதமரும் காயமடைந்த 50 பேரை சந்தித்தனர்.

அத்வானி, தாஜ் ஹோட்டலுக்கு அருகே வந்து நிலைமையை நேரில் பார்த்துவிட்டு மருத்துவமனைக்குச் சென்று காயமடைந்தவர்களை சந்தித்தார்.

இவர்களது வருகையால் ராணுவம், மும்பை போலீசாருக்கு பெரும் தொல்லை ஏற்பட்டது. அதிலும் குறிப்பாக தாஜ் ஹோட்டலில் தீவிரவாதிகளுடன் மோதலில் ஈடுபட்டிருந்த ராணுவத்தினருக்கு அங்கே அத்வானி வந்தது பெரும் சிக்கலை ஏற்படுத்தியது.

தீவிரவாதிகளுடன் மோதல் நடக்கும் நிலையில் நகர் முழுவதும் முக்கிய இடங்களில் பாதுகாபில் ஈடுபட்டிருந்த ஏராளமான போலீசாரும் ராணுவத்தினரும் இவர்களுக்கு பாதுகாப்பு அளிக்க சாலைகளுக்குத் திருப்பிவிடப்பட்டனர்.

அத்வானி தந்த 'எக்ஸ்ட்ரா' தொல்லை:

அதிலும் குறிப்பாக அத்வானி தாஜ் ஹோட்டலுக்கு வெளியே நின்று கொண்டு அரசியல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இது உளவுப் பிரிவின் தோல்வி என்று அவர் பேட்டி தந்து கொண்டிருக்க ராணுவத்தினரும் போலீசாரும் அதை கடுப்பாக பார்த்துக் கொண்டிருந்தனர்.

அவரை பத்திரமாக அங்கிருந்து விமான நிலையத்தில் கொண்டு போய் விட்ட பின்னரே ராணுவமும் போலீசாரும் நிம்மதிப் பெருமூச்சு விட்டனர். அத்வானியின் தாஜ் ஹோட்டல் வருகை, அங்கு நின்று கொண்டு பேட்டி தந்தது ஆகியவை குறித்து நிருபர்களிடம் பாதுகாப்புப் படையினர் கோபமாகவே குறைபட்டுக் கொண்டனர்.

நாட்டின் மிக முக்கியமான தலைவர், தீவிரவாதிகளின் ஹிட் லிஸ்டில் இருப்பர். அவரை பாதுகாக்கும் முழுக் கடமை எங்களுக்கு உண்டு. ஆனால், இங்குள்ள நிலைமையைப் புரிந்து கொள்ளாமல் இந்த இடத்துக்கே நேரில் அவர் வந்தது எங்களுக்கு பெரும் கவலையைத் தந்துவிட்டது. வந்தோம் பார்த்தோம் என்று உடனே போயிருக்கலாம். இங்கு நின்று தான் அவர் பேட்டி தர வேண்டுமா என்றனர்.

இதையடுத்து அத்வானி எதற்காக தாஜ் ஹோட்டலுக்கு வந்து பாதுகாப்புப் படையினருக்கு தொல்லை தந்தார் என மகாராஷ்டிர பாஜக தலைவர் நிதின் கதாரியிடம் நிருபர்கள் கேட்டனர்.

இதற்கு பதிலளித்த நிதின், மும்பை மக்களுக்கு உறுதுணையாக பாஜக நிற்கிறது. இதைக் காட்டவே அவர் வந்தார் என்றார்.

மோடியும்..

இந் நிலையில் இன்று குஜராத் முதல்வர் நரேந்திர மோடியும் மும்பைக்கு வருகிறார். இது பாதுகாப்புப் படையினருக்கு மேலும் எரிச்சலைத் தந்துள்ளது. தீவிரவாதிகளை எல்லாம் வெளியேற்றிய பிறகோ அல்லது சுட்டுக் கொன்ற பிறகோ வருமாறு அவருக்கு மகாராஷ்டிர முதல்வர் தேஷ்முக் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

டிவியில் தெரிய ஓடி வந்த முண்டே:

இதற்கிடையே நரிமன் ஹவுசில் இன்று கமாண்டோக்கள் 3 மாடிகளில் ஆபரேசனை முடித்துவிட்டு வெளியேறியவுடன் பாஜக மூத்த தலைவர் கோபிநாத் முண்டே உடனே வந்து டிவி கேமரா குழுவினர் நின்ற இடத்தில் வந்து போஸ் கொடுக்க ஆரம்பித்தார். தாக்குதல் நடந்தது எப்படி என்றெல்லாம் விளக்கம் தர ஆரம்பித்தார்.

ஆனால், இன்னும் ஆபரேசன் முடியவில்லை. எந்த நேரமும் குண்டுகள் பாயலாம் என்று தகவல் வரவே ஆள் எஸ்கேப்...!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+