அமெரிக்க-ஐரோப்பிய நெருக்கடி: 5 லட்சம் கைவினைக் கலைஞர்கள் பாதிப்பு!
டெல்லி: அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவில் 5 லட்சம் கைவினைக் கலைஞர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள்.
கடந்த ஓராண்டு காலமாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளை வாட்டி வதைக்கும் பொருளாதார நெருக்கடியால் இந்தியாவிலிருந்து ஏற்றுமதியாகும் கைவினைப் பொருட்கள் அடியோடு நிறுத்தப்பட்டுவிட்டன. இதனால் அதிக பாதிப்புக்கு உள்ளாகியிருப்பவர்கள் இந்திய கைவினைக் கலைஞர்கள்தான்.
கிட்டத்தட்ட 5 லட்சம் கைவினைஞர்கள் தொழில் பாதிப்புக்கு உள்ளாகியிருப்பதாக இந்திய சிறுதொழில் வளர்ச்சித் துறை அறிவித்துள்ளது.
இந்தத் துறையில் மட்டும் 10 லட்சம் கைவினைக் கலைஞர்கள் பணியாற்றுகிறார்களாம். இவர்களில் 50 சதவிகிதம் பேர் வேலை இழந்துள்ளனர். குறிப்பாக முரதாபாத், ஜெய்பூர், சஹாரன்பூர், ஜோத்பூர் மற்றும் நர்சாபூர் போன்ற நகரங்களில்தான் அதிக கலைஞர்கள் வேலையிழந்து தவிக்கிறார்களாம்.
'இதுவரை 40 சதவிகித கைவினைப் பொருள் தொழிலகங்கள் மூடப்பட்டுள்ளன. 5 லட்சம் கலைஞர்கள் வேலை இழந்துள்ளனர். இது இன்னும் கூட அதிகரிக்கும் அபாயம் உள்ளத. மேலும் ஏற்றுமதிக்கான ஆர்டர்கள் அடியோடு நின்று போய்விட்டன. உள்நாட்டில் பண்டிகைக் காலத்தில் கூட கைவினைப் பொருட்கள் விற்பனையாகும் வழியைக் காணவில்லை', என்கிறார் அகில இந்திய கைவினைக் கழக துணைத் தலைவர் சுதிர் தியாகி.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications