கார்- டூ வீலர் விற்பனை கடும் சரிவு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஆட்டோ தொழில்துறை தொடர்ந்து சரிவில் இருந்து வருகிறது. நவம்பர் மாத கார் மற்றும் டூவீலர் விற்பனையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது.

முன்னணி கார் நிறுவனங்களான மாருதி, டாடா மோட்டார்ஸ் மற்றும் மகிந்திரா- மகிந்திரா ஆகிய நிறுவனங்களுக்கு பெரும் சரிவு ஏற்பட்டுள்ளது.

அதேபோல டூவீலர் நிறுவனங்களும் கூட சரிவை சந்தித்துள்ளன. ஹீரோ ஹோண்டா நிறுவனத்தைத் தவிர மற்ற அனைத்து நிறுவனங்களுக்கும் நவம்பர் மாதம் கசப்பான அனுபவே கிடைத்துள்ளது.

மாருதி சுசுகி நிறுவனத்திற்கு கார் விற்பனையில் நவம்பர் மாதம் 27.4 சதவீத சரிவு காணப்பட்டது. மொத்தம் 47 ஆயிரத்து 103 கார்களே விற்பனையாகியுள்ளன. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் விற்பனை அளவு 64 ஆயிரத்து 885 கார்களாக இருந்தன.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகன விற்பனை 14 ஆயிரத்து 327 ஆக இருந்தது. அதே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆயிரத்து 322 ஆக இருந்தது. விற்பனையில் சரிவு 12.22 சதவீதம்.

மகிந்திரா - மகிந்திரா நிறுவனத்திற்கு 41.55 சதவீத சரிவு காணப்பட்டது. கடந்த ஆண்டு 17 ஆயிரத்து 844 கார்களை விற்ற இந்த நிறுவனம் இந்த நவம்பர் மாதத்தில் 10 ஆயிரத்து 430 கார்களையே விற்றுள்ளது.

ஹோண்டா நிறுவனம் மட்டும் இந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் லாபம் கண்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 4,425 கார்களை விற்ற இந்த நிறுவனம் இந்த ஆண்டு நவம்பர் மாதம் 5,090 கார்களை விற்று 15 சதவீத வளர்ச்சியைப் பெற்றுள்ளது.

பெருகி வரும் வட்டி விகிதம், நிதிப் பற்றாக்குறை உள்ளிட்டவையே இந்த மந்த நிலைக்குக் காரணம் என தொழில்துறையினர் தெரிவிக்கின்றனர்.

டூவீலர் பிரிவில் ஹீரோ ஹோண்டா நிறுவனம் சற்று தப்பியுள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 2 லட்சத்து 88 ஆயிரத்து 20 டூவீலர்களை விற்ற இந்த நிறுவனம் இந்த ஆண்டு 2 லட்சத்து 89 ஆயிரத்து 426 டூவீலர்களை விற்றுள்ளது.

மற்றபடி பஜாஜ் ஆட்டோவுக்கு 37 சதவீத சரிவும், டிவிஎஸ் நிறுவனத்திற்கு 12.7 சதவீத சரிவும் காணப்பட்டது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+