குபேரை கோட்டைவிட்ட கடலோர காவல் படை: கடற்படை தளபதி புகார்

Subscribe to Oneindia Tamil

Sureesh Mehta
டெல்லி: குஜராத்தில் கடத்தப்பட்ட குபேர் படகை கடலோரக் காவல் படையினர் முதலில் பிடித்துவிட்டு பின்னர் அதை விடுவித்துவிட்டது தெரியவந்துள்ளது. இதையடுத்தே அந்தக் கப்பலில் தீவிரவாதிகள் மும்பை கடல் பகுதிக்கு வந்துள்ளனர்.

குபேர் படகு கடத்தப்பட்டது குறித்து கடலோரக் காவல் படைக்கு தாங்கள் தகவல் தந்ததாகவும், ஆனால் அந்தப் படகை பிடித்த கடலோரக் காவல் படை அதன் டாகுமெண்ட்களை சரிபார்த்துவிட்டு விடுவித்துவிட்டதாகவும் கடற்படை கூறியுள்ளது. இத் தகவலை கடற்படைத் தளபதி அட்மிரல் சுரீஷ் மேத்தாவே தெரிவித்துள்ளார்.

அந்தப் படகுக்குள் கடலோரக் காவல் படையினர் இறங்கி சோதனை நடத்தியிருந்தால் தீவிரவாதக் கும்பல் பிடிபட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

மேலும் கடற்படை-கடலோரக் காவல் படைக்கு இடையே சரியான ஒருங்கிணைப்பு இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டுள்ள அவர், தினமும் அரபிக் கடலில் 50,000 படகுகள் வந்து செல்கி்ன்றன. அவை அனைத்தையும் கண்காணிப்பது என்பதும் சாத்தியமல்ல என்றும் கூறினார்.

மும்பையில் தீவிரவாதிகளுக்கு எதிரான கமாண்டோக்களின் ஆபரேசனை டிவி்க்கள் நேரடியாக ஒளிபரப்பியதையும் அவர் கடுமையாக கண்டித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+