மும்பை சம்பவம் எதிரொலி: சோனியாவின் பிறந்த நாள் கொண்டாட்டம் ரத்து
Subscribe to Oneindia Tamil
டெல்லி: மும்பை தீவிரவாதத் தாக்குதலால் நாடே சோகத்தில் மூழ்கியிருக்கும் நிலையில் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.
கடந்த 2005ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரில் ஏற்பட்ட நில நடுக்கத்தைத் தொடர்ந்து தனது பிறந்த நாளை ரத்து செய்தார் சோனியா. அன்றைய தினத்தை பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட மக்களுடன் செலவிட்டார்.
இந்த நிலையில், தற்போது மும்பை தாக்குதல் சம்பவத்தால் நாடே அதிர்ச்சியிலும், வேதனையிலும் மூழ்கியுள்ளதால், இந்த ஆண்டும் தனது பிறந்த நாள் கொண்டாட்டத்தை ரத்து செய்துள்ளாராம் சோனியா.
டிசம்பர் 9ம் தேதி சோனியா காந்தியின் 62வது பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications