தமிழக பாதுகாப்பு நிலைமை: அதிகாரிகளுடன் கருணாநிதி ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் கருணாநிதி ஆலோசனை நடத்தினார்.
மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து நாடு முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. இதுதொடர்பாக மத்திய உளவுப் பிரிவு பல்வேறு மாநிலங்களுக்கு சில அறிவுரைகளையும் வழங்கியுள்ளது.
இந்த நிலையில், தமிழகத்தில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நிலைமை குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் கருணாநிதி நேற்று ஆலோசனை நடத்தினார்.
தலைமைச் செயலகத்தில் நடந்த இந்த ஆலோசனைக் கூட்டத்தில் உள்துறை செயலாளர், டிஜிபி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது தமிழகம் முழுவதும் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து முதல்வர் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்கள் முதல்வரை சந்தித்து இதுகுறித்து கேட்டபோது, இது வழக்கமான மாதாந்திர கூட்டம்தான்.
மாதா மாதம், தமிழகத்தை அமைதியுடன் வைத்திருக்க செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தப்படும். அதுபோன்ற ஆய்வுக் கூட்டம் இது என்றார்.
ப.சிதம்பரத்தின் புதிய பொறுப்பு குறித்து கேட்டபோது, ஏற்கனவே உள்துறை இணை அமைச்சராக ப.சிதம்பரம் செயல்பட்டுள்ளார். தற்போது உள்துறை அமைச்சராக இந்தியாவை வலிமையான நாடாக உருவாக்க அவர் பாடுபடுவார் என்றார் கருணாநிதி.
-
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
7 ஐபிஎஸ் அதிராரிகள் அதிரடி மாற்றம்.. "மதுரை கமிஷனர் டூ சென்னை சட்டம் ஒழுங்கு!" வெளியான லிஸ்ட் -
140 ரூபாய் குவாட்டர் பாட்டில் வரி மட்டுமே 128.50 ரூபாய் .. தமிழக அரசுக்கு வருமானம் எவ்வளவு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக கருணாநிதி புகைப்படம் அகற்றமா? கொந்தளித்த வைரமுத்து.. என்ன நடந்தது? -
அமைச்சர் ராஜ்மோகனுக்காக.. அகற்றப்பட்ட கலைஞர் படம்.. கடும் எதிர்ப்பால் மீண்டும் வைக்கப்பட்டது! -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
மாஸ்டர் பிளான் போட்ட கருணாநிதி.. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் செங்கற்களில் அன்று நடத்திய சரித்திரம் -
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications