நாமக்கல்: சரியும் முட்டை விலை!
Subscribe to Oneindia Tamil

அஸ்ஸாம் மாநிலத்தில் பரவைக் காய்ச்சல் பரவியுள்ளது. இதையடுத்து இந்திய முட்டைகளை இறக்குமதி செய்ய மஸ்கட், குவைத், கத்தார் போன்ற நாடுகள் மீண்டும் தடை விதித்துள்ளன.
இதன் காரணமாக முட்டை ஏற்றுமதி பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. நாள் ஒன்றிற்கு சுமார் 10 லட்சம் முட்டைகள் தேக்கம் அடைந்து வருவதாகக் கூறப்படுகிறது.
மேலும், தற்போது தமிழகத்தில் உள்ள பலரும் சபரி மலைக்கு மாலை அணிந்து செல்வதாலும் முட்டைக்கு கிராக்கி குறைந்துவிட்டது.
இதனால் முட்டைகள் பெருமளவில் தேக்கம் அடைந்துள்ளதாக கோழிப்பண்ணை உரிமையாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இதனால் விலை குறைந்துள்ளது. இதுவரை 210 பைசாவாக இருந்து முட்டை தற்போது 200 பைசாவாக குறைந்துள்ளது.












Click it and Unblock the Notifications