திவால் நோட்டீஸ் மூடில் ஜிஎம், கிறிஸ்லர்?

Subscribe to Oneindia Tamil

டெட்ராய்ட்: நிதி நெருக்கடி, தொடர் நஷ்டத்திலிருந்து தப்பிக்க திவால் நோட்டீஸ் தரும் முடிவுக்கு வந்துவிட்டது உலகின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனங்களான ஜெனரல் மோட்டார்ஸ் (ஜிஎம்) மற்றும் கிறிஸ்லர்.

உலகப் பொருளாதார பெருமந்தம் காரணமாக அமெரிக்காவின் வங்கித்துறை அடியோடு ஆட்டம் கண்டுவிட்டது.

லேஹ்மன் பிரதர்ஸ் திவால் நோட்டீஸ் கொடுத்து நிதி நெருக்கடியிலிருந்து தப்பித்தது. பல வங்கிகள் மூடப்பட்டன. இன்னும் சில வேறு வங்கிகளுடன் சத்தமில்லாமல் இணைக்கப்பட்டன.

அடுத்த மார்ச்சுக்குள் மேலும் 15 வங்கிகள் மூடப்படும் அபாயம் உள்ளதாக அமெரிக்க நிதித்துறையே அறிவித்துள்ளது.

இந்த நிலையில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான ஜிஎம்மும் இந்த நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறது. இதிலிருந்து மீண்டுவர வழியின்றி 18 பில்லியன் டாலர்களை உதவியாக அமெரிக்க அரசிடம் கேட்கிறது.

இன்னொரு பெரிய கார் உற்பத்தி நிறுவனமான கிறிஸ்லரும் இதே நிலையில் தள்ளாடிக் கொண்டுள்ளது. இந்த நிறுவனம் 7 பில்லியன் டாலர்கள் வரை உதவி கேட்கிறது.

இந்த உதவி கிடைக்காத பட்சத்தில் திவால் நோட்டீஸ் கொடுப்பதைத் தவிர வேறு வழியில்லை என்று தங்கள் ஊழியர்கள், கடன்காரர்கள், வங்கிகள் மற்றும் முதன் வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் தெரிவித்துள்ளன.

இதுகுறித்து அமெரிக்க காங்கிரஸூக்கும் தகவல் அளித்துள்ளன இந்த நிறுவனங்கள்.

இந்த நிறுவனங்களின் கோரிக்கையை காங்கிரஸூம் கேட்டு வைத்துக் கொண்டுள்ளது.

நிறுவனத்தைக் கலைத்துவிடாமல், திவால் நோட்டீஸ் கொடுப்பது பாதுகாப்பான வழியாக இருக்கும் என இந்த நிறுவனங்கள் கருதுகின்றன. இதுகுறித்து சட்ட நிபுணர்களுடன் தீவிர ஆலோசனையிலும் இறங்கியுள்ளன இந்த நிறுவனங்கள்.

இந்த நிலையில் பலம் வாய்ந்த யுனைட்டட் ஆட்டோமொபைல் ஒர்க்கர்ஸ் யூனியன், இந்த நிறுவனங்களுக்கு உதவ முன் வந்துள்ளது. 34 பில்லியன் டாலர் வரை இந்த நிறுவனங்களுக்கு கடனுதவி தர ஆட்டோமொபைல் ஒர்க்கர்ஸ் யூனியன் அறிவித்துள்ளது.

ஏற்கெனவே 1 லட்சத்துக்கும் மேல் ஊழியர் குறைப்பு செய்துள்ளது ஜிஎம். இன்னும் 31500 பேரை நீக்கும் முடிவில் உள்ளது.

அடுத்த கட்ட நடவடிக்கை என்னவென்பது நாளை காலையில் தெரிந்துவிடும்!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+