விரைவில் பெடரல் ஏஜென்சி அமையும்: கபில் சிபல்
டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ள தீவிரவாதம் குறித்த விவகாரங்களை விசாரிக்கவுள்ள பெடரல் ஏஜென்சியை அமைப்பது தொடர்பாக உள்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய அறிவியல், தொழில்நுட்பத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறுகையில், பாதுகாப்பு தேசிய கவலையாகும். உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் அதுகுறித்து உரிய கவனம் செலுத்தி வருகிறார்.
பிரதமர் நாட்டுக்கு வெளியிட்ட கொள்கைக் குறிப்புகள் ( பெடரல் ஏஜென்சி உள்ளிட்டவை) குறித்து உள்துறை அமைச்சகம் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளது. விரைவில் அவை அமலுக்கு வரும். அதற்கு சற்று கால அவகாசம் பிடிக்கும்.
சொன்னதை நிச்சயம் செய்வோம். அது எங்களது கடமை. எதிர்கால பாதுகாப்பு நிச்சயம் சிறப்பாக இருக்கும் என்பதை மக்களுக்கு சொல்லும் கடமையிலிருந்து நாங்கள் பின் வாங்க மாட்டோம். எனவே சொன்னதை நிச்சயம் விரைவில் செய்வோம் என்றார் சிபல்.
மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பெடரல் ஏஜென்சி அமைப்பது தவிர முக்கிய நகரங்களில் என்.எஸ்.ஜி. கமாண்டோ படையை நிறுவுவது, கடல் மற்றும் வான் பாதுகாப்பை அதிகரிப்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை பிரதமர் வெளியிட்டிருந்தார் என்பது நினைவிருக்கலாம்.












Click it and Unblock the Notifications