ரேஷன் கடை கூட்டத்தில் சிக்கி கர்ப்பிணி காயம் - சிசு பலி
சேலம்: சேலம் மாவட்டம், ஏற்காடு பகுதியில் ரேஷன் கடையில் பொருட்கள் வாங்க சென்ற கர்ப்பிணியை கும்பல் நெட்டித் தள்ளியதால் அவர் வயிற்றில் இருந்த குழந்தை பரிதாமாக இறந்தது.
சேலம் மாவட்டம், ஏற்காடு அருகில் உள்ளது பெலக்காடு. இங்கு உள்ள நியாயவிலைக் கடையில் பெலாக்காடு, மதூர், அரங்கம் போன்ற பகுதிளைச் சேர்ந்த கிராம மக்கள் பொருட்கள் வாங்குவது வாடிக்கை.
இந்த நிலையில் ரேஷன்கடையில் மண்ணெண்ணை வினியோகம் செய்யப்பட்டது. இதை வாங்குவதற்காக கூலித் தொழிலாளியான கரியமலை என்பவரின் மனைவி குப்பாயி (25) சென்றுள்ளார். இவர் நிறைமாத கர்ப்பிணி.
இந்த நிலையில் மண்ணெண்ணை வாங்க கும்பல் போட்டி போட்டி நெட்டித் தள்ளியதில் குப்பாயி மயங்கி விழுந்தார். அவரை காப்பாற்றி வாழவந்திநாடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
முதலுதவிக்குப் பின்னர் மேல் சிகிச்சைக்கு சேலம் அரசு மாவட்ட மருத்துவ மனைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
சேலம் அரசு மாவட்ட மருத்துவ மனையில் சிகிச்சைக்கு அனுமதித்த போது டாக்டர்கள் குப்பாயிக்கு பரிசோதனை செய்தனர். அப்போது, குப்பாயி வயிற்றில் உள்ள குழந்தை இறந்தது தெரியவந்தது.
இதனையறிந்து குப்பாயியும், அவரது கணவரும் கதறி அழுதனர்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications