புதிய பங்கு வெளியீடு: கால அவகாசத்தை நீட்டித்தது செபி
மும்பை: நாட்டின் பங்கு வர்த்தகத்தில் நிலவும் சுணக்கத்தை அடுத்து, புதிய பங்குகள் வெளியுடுவதற்கான கால அவகாசத்தை நீட்டித்துள்ளது செபி எனப்படும் இந்திய பங்குச் சந்தை கட்டுப்பாட்டு மையம்.
இன்றைய நிதி நெருக்கடி சூழலில், பல நிறுவனங்களால் அவற்றின் விரிவாக்க நடவடிக்கைகளுக்கு தேவையான நிதியை திரட்டிக் கொள்ள முடியாத சூழல் நிலவுகிறது.
பரஸ்பர நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பும் சரிவடைந்து வருகிறது. இவற்றைச் செபி ஒரு சில புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பொதுவாக ஒரு நிறுவனம் 'செபி' அமைப்பிடம் பங்கு வெளியீட்டிற்கு அனுமதி பெற்ற பிறகு மூன்று மாத காலத்திற்குள் பொது மக்களுக்கு பங்குகளை வெளியிட்டு மூலதனச் சந்தையில் இறங்க வேண்டும் என்ற விதி உள்ளது. இப்போது இந்த விதியைத் தளர்த்தி, 1 ஆண்டு வரை கால அவகாசம் தந்துள்ளது செபி.
வியாழக்கிழமை நடந்த செபி இயக்குனர் குழு கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்டது.
பங்கு வெளியீட்டிற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ள போதிலும், இந்த ஓராண்டு காலத்திற்குள் பங்கு வெளியீட்டை மேற்கொள்ள விரும்பும் நிறுவனங்கள், அண்மைக் கால புள்ளி விவரங்களையும், நிறுவனம் குறித்த இதர புதிய தகவல்களையும் செபி அமைப்பிற்கு தெரிவிக்க வேண்டும் என்ற புதிய நெறிமுறையையும் 'செபி' அமைப்பு கொண்டு வந்துள்ளது.
பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கும் ஒரு சில புதிய திட்டங்களை அறிவித்துள்ளது செபி. குறிப்பாக, கால வரையறையுடன் கூடிய பரஸ்பர நிதி திட்டங்களில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்கள், குறிப்பிட்ட காலத்திற்குள் தொகையை பரஸ்பர நிதி நிறுவனங்களிடமிருந்து பெற முடியாத வகையில் ஒரு திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது.
பங்கு வர்த்தகம் நன்கு இல்லாத நிலையில், பல முதலீட்டாளர்கள், பரஸ்பர நிதி திட்டங்களில் செய்திருந்த முதலீட்டை அதிக அளவில் திரும்ப பெற துவங்கியுள்ளனர். இதனால் பரஸ்பர நிதி நிறுவனங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனை கருத்தில் கொண்டே 'செபி' அமைப்பு இத்திட்டத்தை அறிவித்துள்ளது. இப்புதிய திட்டத்தின்படி, காலவரையறையுடன் கூடிய புதிய திட்டங்களை, பரஸ்பர நிதி நிறுவனங்கள் பங்குச் சந்தைகளில் கட்டாயம் பட்டியலிட வேண்டும்.
அவ்வாறு பட்டியலிடப்படுவதால் முதலீட்டாளர்கள், அவர்கள் கொண்டுள்ள யூனிட்டுகளை பங்குச் சந்தையின் வாயிலாக விற்றுக்கொள்ளலாம். இதனால், முதலீட்டாளர்கள் பரஸ்பர நிதி நிறுவனங்களிடமிருந்து தொகையை பெறுவதற்கு பதிலாக, யூனிட்டுகளை பங்குச் சந்தையில் விற்பதன் வாயிலாக பெற்றுக் கொள்ளலாம்.
இந்த புதிய திட்டம், பரஸ்பர நிதி நிறுவனங்களால் நிர்வகிக்கப்படும் சொத்து மதிப்பில் ஏற்படும் திடீர் சரிவைத் தடுத்து நிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications