சவான் முதல்வராகிறார்-ஏற்க மறுத்த ராணே நீக்கம்
மும்பை: மகாராஷ்டிராவில் ஆட்சி அமைக்க வருமாறு முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அசோக் சவானுக்கு, மகாராஷ்டிர மாநில ஆளுநர் எஸ்.சி.ஜமீர் அழைப்பு விடுத்துள்ளார்.
இவரை முதல்வராக ஏற்க மறுத்து காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை விமர்சித்த மூத்த தலைவர் நாராயண் ராணே கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
புதிய மகாராஷ்டிர முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள அசோக் சவான், துணை முதல்வராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள தேசிய வாத காங்கிரஸ் கட்சியின் சகன் புஜ்பால் ஆகியோர் மும்பையில் நேற்று ஆளுநர் ஜமீரை சந்தித்தனர்.
சட்டசபைக் கட்சித் தலைவர்களாக தாங்கள் தேர்வு செய்யப்பட்டிருப்பதாக தெரிவித்து அது தொடர்பான கடிதத்தையும், 168 எம்.எல்.ஏக்களின் ஆதரவு தங்களுக்கு உள்ளதைத் தெரிவிக்கும் கடிதத்தையும் அளித்தனர்.
இவர்களுடன் பதவி விலகும் முதல்வர் விலாஸ் ராவ் தேஷ்முக், மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்ராவ் தாக்ரே உள்ளிட்டோரும் உடன் சென்றிருந்தனர்.
இதையடுத்து சவானை ஆட்சி அமைக்க வருமாறு ஆளுநர் ஜமீர் அழைப்பு விடுத்தார்.
பதவியேற்பு விழா நாளை அல்லது திங்கள்கிழமை காலை நடைபெறும் எனத் தெரிகிறது.
ஆனால், சவானை முதல்வராக ஏற்க முடியாது என மகாராஷ்டிர மாநில வருவாய்த்துறை அமைச்சர் ராணே போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
சிவசேனாவிலிருந்து காங்கிரசுக்கு வந்த அவர் முதல்வர் பதவியைர் பிடிக்க நெடு நாட்களாகவே முயன்று வருகிறார். இம்முறை முதல்வராகிவிடலாம் என்ற கனவில் இருந்தார்.
அசோக் சவானை முதல்வராக ஏற்க தேசியவாத கட்சியின் தலைவர் பவார் எதிர்ப்புத் தெரிவித்தபோது ராணேவை முதல்வராக்குவோம் என்று காங்கிரஸ் அறிவித்தது. ஆனால், ராணேவை சமாளிப்பது மிகவும் கஷ்டம் என்பதால் தான் சவானை ஏற்க முன் வந்தார் பவார்.
இவ்வாறு தன்னை பயன்படுத்தி அசோக் சவானை முதல்வராக்கியதால் காங்கிரஸ் மீது கடுப்பாகியுள்ளார் ராணே. இதனால் சவானின் கீழ் தன்னால் பணியாற்ற முடியாது என்று அறிவித்துள்ளார். மேலும் சோனியாவையும் அவர் விமர்சித்தார்.
அவருக்கு சில எம்எல்ஏக்களின் ஆதரவு உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந் நிலையில் அவரை கட்சியிலிருந்து நீக்கி காங்கிரஸ் உத்தரவிட்டுள்லது. இதனால் கட்சியில் பிளவு ஏற்படலாம் என்று கருதப்படுகிறது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!












Click it and Unblock the Notifications