கொல்கத்தா வந்தார் புட்பால் மன்னன் மாரடோனா

கொல்கத்தாவுக்கு இன்று அதிகாலை 1.25 மணிக்கு வந்து சேர்ந்தார் மாரடோனா. அவரை விமான நிலையத்தில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டு வந்து வரவேற்றனர்.
மேலும் மாரடோனா அழைத்துச் செல்லப்பட்ட வழியெங்கும் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டு நின்று இந்திய மற்றும் அர்ஜென்டினா நாட்டுக் கொடிகளை அசைத்து மாரடோனாவை வரவேற்று மகிழ்ந்தனர்.
மாரடோனாவின் வருகையையொட்டி கொல்கத்தா நகரமே திருவிழாக்கோலம் பூண்டு காணப்படுகிறது.
மாரடோனா வருகையையொட்டி 5000க்கும் மேற்பட்ட போலீஸார் மற்றும் அதி விரைவுப்படை வீரர்கள், கமாண்டோக்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இன்று கொல்கத்தாவின் மஹேஸ்தலாவில் உள்ள மாரடோனா இந்திய கால்பந்துப் பள்ளிக்கு மாரடோனா அடிக்கல் நாட்டுகிறார். இந்த இடத்திற்கு ஹெலிகாப்டர் மூலம் மாரடோனா அழைத்துச் செல்லப்படுகிறார்.
மாரடோனாவுடன் அவரது தோழி வெரோனிகாவும் உடன் செல்கிறார். பின்னர் நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு ஹோட்டலுக்குத் திரும்பும் மாரடோனா அங்கு செய்தியாளர்களைச் சந்திக்கிறார். பின்னர் சால்ட்லேக் ஸ்டேடியத்தில் நடைபெறும் பாராட்டு விழாவில் கலந்து கொள்கிறார்.
இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
முன்னதாக வெளிநாட்டு அமைச்சர்கள் லெவன் அணிக்கும், முதல்வர் லெவன் அணிக்கும் இடையிலான காட்சி கால்பந்துப் போட்டியை மாரடோனா தொடங்கி வைக்கிறார்.
இந்திய வீரர்கள் தவிர பல்வேறு நாட்டு பிரபல வீரர்கள் இந்தப் போட்டியில் விளையாடவுள்ளனர்.
பின்னர் நடைபெறும் பாராட்டு விழாவை மத்திய வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி தொடங்கி வைக்கிறார்.
சால்ட் லேக் ஸ்டேடியத்தின் தங்கத்தால் ஆனி மாதிரி, மாரடோனாவுக்கு பரிசாக அளிக்கப்படவுள்ளது.
நாளை மாரடோனா அன்னை தெரசா இல்லத்திற்குச் செல்கிறார். அங்கு தெரசா படத்திற்கு அஞ்சலி செலுத்துகிறார்.
மேலும் மேற்கு வங்க முன்னாள் முதல்வர் ஜோதிபாசுவை அவரது இல்லத்திற்குச் சென்று சந்திக்கிறார்.
பின்னர் மோகன் பகான் மைதானத்தில் நடைபெறும் கால்பந்து கிளினிக்கிலும் அவர் கலந்து கொள்கிறார். அதன் பின்னர் மாரடோனா தங்கியுள்ள ஹோட்டலில் இரவு ஏலம் நடைபெறும். இதில், மாரடோனா கையெழுத்திட்ட ஐந்து ஜெர்சிகளும், கால்பந்துகளும் ஏலம் விடப்படும். இந்த ஏலத்தில் கிடைக்கும் தொகை இந்திய கால்பந்து சங்கத்திற்கு அளிக்கப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications