தேர்தலுக்குப் பின் பாஜக-அதிமுக கூட்டணி வரலாம்: சிபிஐ
சென்னை: மக்களவைத் தேர்தலுக்குப் பின் பாஜவுடன் அதிமுக கூட்டு சேர வாய்ப்புள்ளதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் ஒப்புக் கொண்டுள்ளார்.
அதிமுகவுடன் முதலில் இந்திய கம்யூனிஸ்ட் கூட்டணி பேச்சு நடத்தியது. நேற்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பேச்சு நடத்தியது.
இதையடுத்து இரு இடதுசாரிக் கட்சிகளுடன் கூட்டணி சேரப் போவதாக அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா அறிவித்தார்.
இந் நிலையில் நிருபர்களிடம் பேசிய தா.பாண்டியன்,
இலங்கைப் பிரச்னை தொடர்பாக தமிழகத்தில் அனைத்துக் கட்சித் தீர்மானம், சட்டசபை தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட நிலையில், அதன் மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது, இனி என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளோம் என்பது பற்றி பிரதமர் எதுவும் கூறவில்லை.
தமிழகத்தில் அதிமுகவுடன் இணைந்து லோக்சபா தேர்தலைச் சந்திப்பது என இரு கம்யூனிஸ்ட் கட்சிகளும் ஒருமித்த முடிவெடுத்துள்ளோம் என்றார்.
அவரிடம், கம்யூனிஸ்டுகளின் இந்த முடிவால் தமிழகத்தில் பாஜக தனிமைப்படுத்தப்பட்டுள்ளதா என்று கேட்டதற்கு,
அவர்களுக்கு யாருமில்லையென்றால் ராமன், அனுமனுடன் தேர்தலைச் சந்திப்பார்கள். பாஜக, மற்றும் காங்கிரஸ் கட்சி கூட்டணிகளை தோற்கடிப்போம். இடதுசாரிகள் இடம்பெற்ற அணி தான் மத்தியில் அடுத்த ஆட்சியை தீர்மானிக்கும் என்றார்.
தொழிலாளர் விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிமுகவுடன் உறவு கொள்ளப் போகிறீர்களே என்று கேட்டதற்து.
அந்த அளவுகோலை வைத்துப் பார்த்தால் ஒவ்வொருவரும் தனித்துதான் தேர்தலைச் சந்திக்க வேண்டி வரும். மாறுபட்ட கொள்கைகள் இருப்பதால்தான் தனித்தனி கட்சிகளாக செயல்படுகிறோம். பொதுக் கடமைக்காக ஒன்றுபட்டு நிற்கிறோம் என்றார்.
தேர்தலுக்குப் பிறகு பாஜகவுடன் கூட்டு சேரக்கூடாது என்ற உறுதியை அதிமுகவிடம் இருந்து பெற்றுள்ளீர்களா என்று கேட்டதற்கு,
அரசியல்வாதிகளின் தேர்தல் வாக்குறுதிகளை மக்கள் நம்பலாம், நாங்கள் நம்ப மாட்டோம். யார் ஆதரவு கொடுத்தாலும் பாஜக தலைமையிலோ, காங்கிரஸ் தலைமையிலோ அடுத்த ஆட்சி அமையாது என்றார்.
-
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய்












Click it and Unblock the Notifications