சட்ட மாணவர்களின் ஜாமீன், முன் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
சென்னை: சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் 29 பேர் தாக்கல் செய்திருந்த ஜாமீன் மனுக்களை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
நவம்பர் 12ம் தேதி சென்னை சட்டக் கல்லூரி வளாகத்தில் நடந்த பயங்கர மோதலில் 3 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள 29 மாணவர்கள் ஜாமீன் கோரி சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்த மனுக்கள் நேற்று நீதிபதி தேவதாஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. கிட்டத்தட்ட 2 மணி நேரம் நடந்த விவாதத்தின் இறுதியில் நேற்று இரவு நீதிபதி தனது தீர்ப்பை அறிவித்தார்.
அரசுத் தரப்பில் மாணவர்களுக்கு ஜாமீன் அளிக்க கடும் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டது. சில மாணவர்களின் வன்முறையால் 2000 மாணவர்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலால், அனைத்து சட்டக் கல்லூரிகளிலும் பரீட்சைகளை ரத்து செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டு விட்டது.
கைது செய்ய்பட்டவர்களை விடுதலை செய்தால், அது மீண்டும் நடக்கவுள்ள தேர்வுகளைப் பாதிக்கும். இந்த மாணவர்களால் தாக்கப்படக் கூடும் என்ற பயம் மற்ற மாணவர்களுக்கு ஏற்படலாம் என்றார்.
வாதங்களை கேட்டு முடித்த நீதிபதி இரவு 10 மணியளவில் தனது தீர்ப்பை அறிவித்தார். அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக அவர் உத்தரவிட்டார்.
இதேபோல சட்டக் கல்லூரி முதல்வர் அலுவலகத்தை தாக்கியது தொடர்பான வழக்கில் ஜாமீன் கோரியிருந்த 13 பேரின் மனுக்களையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications