சென்னை: 2 வங்கிகளில் தீ- 8 பேர் மீட்பு
சென்னை: சென்னையில் இரண்டு வங்கிக் கட்டடங்களில் இன்று திடீர் தீவிபத்து ஏற்பட்டது. அதில் சிக்கிக் கொண்ட 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
சென்னை அண்ணா நகர் 2-வது அவென்யூவில் லட்சுமி விலாஸ் வங்கி உள்ளது. இது 3 மாடி கட்டிடம் ஆகும். இந்த வங்கியின் லாக்கர் அடித்தளத்தில் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது. தரைத் தளத்தில் ஸ்டிரைட் இன்போ கம்ப்யூட்டர் என்ற நிறுவனம் செயல்பட்டு வருகிறது.
இன்று அதிகாலை 2.45 மணிக்கு அந்த கம்ப்யூட்டர் நிறுவனத்தில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த ஊழியர்கள் வெளியே வர முடியாமல் தவித்தனர்.
இதை பார்த்த காவலாளி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். ஜெ.ஜெ. நகர், கீழ்ப்பாக்கம், கோயம் பேடு, எஸ்பிளனேடு பகுதிகளில் இருந்து தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று அவர்களை மீட்க முயன்றனர்.
ஆனால் தீ வேகமாக எரிந்ததால் கட்டிடத்தில் சிக் கிக்கொண்ட 8 ஊழியர்களும் 3-வது மாடியின் மேல் தளத் துக்கு சென்று கூக்குரலிட்டனர். இதனால் தீயணைப்பு வண்டியின் ராட்சத ஏணி மூலம் ஒவ்வொருவரையும் கயிறு கட்டி மீட்டனர்.
மீட்பு பணி ஒருபுறம் நடை பெற இன்னொரு பக்கம் தீயை அணைக்கும் பணி யிலும் வீரர்கள் ஈடுபட்டனர். சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இந்த தீ விபத்தில் கம்ப்யூட்டர் பொருட்கள், சோபாக் கள் எரிந்து நாசமானது. ரூ.1 லட்சத்திற்கு மேல் சேதம் ஏற்பட்டிருப்பதாக தீயணைப்பு படையினர் தெரிவித்தனர்.
இந்த விபத்தில் வங்கியின் லாக்கருக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. அதில் பல லட்சம் ரூபாய் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
மயிலாப்பூரில் ..
இதேபோல் மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் ரோட்டில் 9 மாடி கட்டிடத்தில் செயல் பட்டு வந்த எச்.டி.எப்.சி. வங்கியிலும் இன்று அதிகாலை திடீர் தீ விபத்து ஏற்பட்டது.
கட்டிடத்தின் அடி தளத்தில் வங்கியின் தபால்கள், உபயோகமற்ற பொருட்கள், தஸ்தாவேஜூக்கள் சேமித்து வைக்கப்பட்டிருந்தன.
இங்கு அதிகாலை 3.15 மணிக்கு திடீரென தீப்பிடித்து கொண்டதால் மயிலாப்பூர், தேனாம் பேட்டை, திருவல்லிக்கேணி பகுதியில் இருந்து தீயணைப்பு வீரர்கள் சென்று தீயை அணைத்தனர்.
இந்த விபத்தில் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
சென்னையில் மழை வெளுக்கப்போகுது.. மொத்தமா 9 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை! அடுத்த 2 மணி நேரம் உஷார் -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
AirTrunk: 3 லட்சம் கோடி மெகா முதலீடு.. சென்னை அம்பத்தூரில் ரூ.10,000 கோடியில் அஸ்திவாரம்! -
சென்னை உட்பட.. 26 மாவட்டங்களை லிஸ்ட் போட்ட வானிலை மையம்! ஆட்டம் ஆரம்பம்! கனமழை வெளுக்கப்போகுது! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications