கேஸ் விலை-குறைக்க கருணாநிதி கோரிக்கை
சென்னை: பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தது போல சமையல் எரிவாயு விலையையும் மத்திய அரசு குறைக்க வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கும், பெட்ரோலியத் துறை அமைச்சர் முரளி தியோராவுக்கும் முதல்வர் கருணாநிதி கோரிக்கை விடுத்து கடிதம் எழுதியுள்ளார்.
பெட்ரோல், டீசல் விலைக் குறைப்புக்கு நன்றி தெரிவித்து பிரதமருக்கும், காங்கிரஸ் தலைவர் சோனியாவுக்கும் முதல்வர் கருணாநிதி கடிதம் எழுதியுள்ளார்.
அதில், பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படுமா என்று நாட்டு மக்கள் எதிர் பார்த்து காத்திருந்த வேளையில் அவற்றின் விலை குறைப்பு பற்றிய அறிவிப்பை ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் பெருமகிழ்ச்சி அடைந் துள்ளனர்.
இந்த விலை குறைப்பால் பெரும்பாலான மக்கள் பயன் அடைவார்கள். இந்த அறிவிப்பை வெளி யிட்டதற்கு நான் நன்றி தெரி வித்துக்கொள்கிறேன்.
தி.மு.க.அரசு 2006-07ம் ஆண்டில் சமையல் வாயு இணைப்புடன் கியாஸ் அடுப்பு இலவசமாக வழங் கும் திட்டத்தை பெண்கள் பயன் அடையும் வகையில் அறிமுகப்படுத்தியது. இந்த திட்டம் 3 லட்சம் ஏழை குடும்பங்கள் பயன் பெறும் வகையில் ரூ.60 கோடியில் அமுல்படுத்தப்பட்டது.
2007-08ம் ஆண்டில் கியாஸ் இணைப்புடன் 7.52 லட்சம் கியாஸ் அடுப்புகள் ரூ.160 கோடியில் இலவசமாக வினியோகிக்கப்பட்டது. இதுவரை 10.52லட்சம் ஏழை குடும்பங்கள் இந்த திட்டத்தால் பயன் அடைந்துள்ளன. இந்த திட்டம் 2008-09 ஆண்டிலும் தொடரும் மேலும் 8 லட்சம் ஏழை குடும்பம் பயன்பெறும். இதற்கான பட்ஜெட் ஒதுக் கீடு ரூ.160 கோடி.
சமையல் கியாஸ் விலையை குறைக்க வேண்டும் என்று தாய் மார்கள் ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். சமை யல் வாயு விலையை உயர்த் துவதற்கு முன்பு இருந்த பழைய விலைக்கே குறைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். எனது இந்த கோரிக்கையை நன்கு பரிசீலித்து நல்ல அறிவிப்பை வெளியிடுவீர்கள் என்று நம்புகிறேன்.
பெட்ரோல், டீசல் விலை குறைப்பு பற்றிய அறிவிப்புக்கு எனது மன மார்ந்த நன்றி என்று கூறியுள்ளார் கருணாநிதி.
இதேபோல முரளி தியோராவுக்கும் கடிதத்தின் நகலை அவர் அனுப்பியுள்ளார்.
-
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications