ரயில் மறியல்-தமுமுக தொண்டர்கள் கைது
சென்னை: அயோத்தியில் இடிக்கப்பட்ட அதே இடத்தில் மீண்டும் பாபர் மசூதியை கட்ட வேண்டும் என்று கோரி ரயில் மறியலில் ஈடுபட முயன்ற ஆயிரக்கணக்கான தமிழக முஸ்லீம் முன்னேற்றக் கழக தொண்டர்கள் கைது செய்யப்பட்டனர்.
இன்று அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்ட நினைவு தினமாகும். இதையொட்டி மீண்டும் பாபர் மசூதியை அதே இடத்தில் கட்டக் கோரி ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என தமுமுக அறிவித்திருந்தது.
அதன்படி இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் தமுமுகவினர் ஆயிரக்கணக்கில் ரயில்களை மறிக்கத் திரண்டனர். அவர்களைப் போலீஸார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
சென்னையில் ...
சென்னையில் சென்டிரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களுக்கு அருகே மறியல் போராட்டம் நடத்த தமுமுகவினர் முயன்றனர்.
எழும்பூர் ரவுண்டானாவில் உள்ள வீரன் அழகுமுத்துக்கோன் சிலை அருகே மாநிலத் தலைவர் ஜவாஹிருல்லா தலைமையில் தமுமுகவினர் திரண்டு ரயில் நிலையம் நோக்கி செல்ல முயன்றனர்.
திடுதிடுவென அவர்கள் ஓடியதால் போலீஸார் விரட்டிச் சென்று பிடிக்க முயன்றனர். அப்போது தலைமைக் காவலர் முருகையா என்பவர் கீழே விழுந்து பலத்த அடிபட்டார். அவரை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.
ரயில் நிலையப் பகுதியில் நின்றிருந்த போலீஸார் ஓடி வந்த தமுமுகவினரை தடுத்து நிறுத்திக் கைது செய்தனர்.
அதேபோல சென்டிரல் ரயில் நிலையம் அருகே பழைய மூர்மார்க்கெட் பகுதியில் குவிந்த தொண்டர்கள் ரயில் நிலையத்திற்குள் செல்ல முயன்றபோது தடுத்து நிறுத்தி போலீஸார் கைது செய்தனர்.
சைதாப்பேட்டை உள்ளிட்ட இடங்களிலும் இன்று நூற்றுக்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரத்தில் தமுமுக சார்பில் மாநிலச் செயலாளர் முகமது கவுஸ் தலைமையில் போராட்டம் நடந்தது. 500க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
ரயில் நிலையத்திற்குள் நுழைய முயன்ற அவர்களைப் போலீஸார் தடுத்து கைது செய்தனர்.
தமிழகம் முழுவதும் ஆயிரக்கணக்கான தமுமுகவினர் கைதானதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications