பாக் நடவடிக்கையால் பாதிப்பில்லை என்கிறது லஷ்கர்-தீவிரவாதிகள் கைது கண் துடைப்பா?
இந்தியா மற்றும் அமெரிக்காவின் நெருக்குதலைத் தொடர்ந்து தீவிரவாதிகள் வேட்டையில் பாகிஸ்தான் இறங்கியுள்ளது. முஸாபரபாத்தில் நடத்திய வேட்டையில் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் செயல் தலைவரான ஜாகி உர் ரஹ்மான் லக்வி உள்ளிட்ட 20 தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டனர்.
அதேபோல நேற்று ஜெய்ஷ் இ முகம்மது அமைப்பின் தலைவரான மெளலானா மசூத் அஸார் கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார். இவர் தான் இந்தியன் ஏர்லைன்ஸ் விமானம் கடத்தப்பட்டபோது காஷ்மீர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டு ஆப்கானிஸ்தானின் காண்டஹார் நகரில் போய் இந்திய அரசால் இறக்கிவிடப்பட்டவர்.
இதில் லக்வி மற்றும் அஸாரை தன்னிடம் ஒப்படைக்க வேண்டும் என இந்தியா கோரியுள்ளது. ஆனால் இருவரையும் ஒப்படைக்க முடியாது. வலுவான ஆதாரங்களை இந்தியாவும், அமெரிக்காவும் முதலில் காட்டட்டும். தேவைப்பட்டால் இங்கு வந்து இவர்களிடம் விசாரணை நடத்த அனுமதி தருவோம் என்று பாகிஸ்தான் அரசு கூறியுள்ளது.
இந்த நிலையில், இந்த கைது நடவடிக்கையால் தங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று லஷ்கர் இ தொய்பா கூறியுள்ளது.
இந்த அமைப்பைச் சேர்ந்த ஒருவர் வாஷிங்டன் போஸ்ட் இதழுக்கு அளித்துள்ள பேட்டியில், எங்களது செயல்பாடுகளை இந்த கைது நடவடிக்கை எந்த வகையிலும் பாதிக்காது.
எங்களது பலம் அசாத்தியமானது. ஆப்கான் எல்லையை ஒட்டியுள்ள பாகிஸ்தானின் பழங்குடியினப் பகுதிகளில் நாங்கள் வலுவாக இருக்கிறோம்.
திட்டமிட்டு செயல்பட்டு வருகிறோம். ஒருங்கிணைந்த கட்டமைப்பைக் கொண்டுள்ளோம் என்றார் அவர்.
இவர் சொல்வதையும், பாகிஸ்தான் அரசு கூறிவதையும் வைத்துப் பார்க்கும்போது, தீவிரவாதிகளை வேட்டையாடுவது ஒரு கண் துடைப்பு நடவடிக்கையாக இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
சர்வதேச நெருக்குதல், குறிப்பாக அமெரிக்காவுக்கு பயந்து இந்த கண்துடைப்பு கைது நடவடிக்கைகளில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளதாகவே கருதப்படுகிறது.
-
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்!













Click it and Unblock the Notifications