தூத்துக்குடி-மும்பையில் பலியான என்ஜீனியர் உடல் அடக்கம்
தூத்துக்குடி: மும்பை தீவிரவாதத் தாக்குதலில் பலியான தூத்துக்குடி மாவட்ட என்ஜீனியரின் உடல் அடக்கம் புதியம்புத்தூரில் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரை சேர்ந்த துரைராஜ் மகன் ஜெயக்குமார். மதுரை ரயில்வே எக்ஞ்சேஞ்சில் என்ஜீனியராக வேலை பார்த்து வந்தார்.
கடந்த 23ம் தேதி சென்னையிலிருந்து மும்பைக்கு சுற்றுலா சென்றார்.
26ம் தேதி காலை மும்பையிலிருந்து தனது வீட்டிற்கு தொலைபேசியில் பேசினார். அதன்பிறகு அவரை பற்றி தகவல் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மும்பை தினகரன் நாளிதழில் படத்துடன் காணவில்லை என விளம்பரம் செய்தனர்.
இந்த விளம்பரத்தை பார்த்த மும்பை காவல்துறையினர் புதியம்புத்தூரில் உள்ள அவரது சகோதரர் செல்வினை தொடர்பு கொண்டு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் ஜெயக்குமார் இறந்துவிட்டதாக கூறியுள்ளனர்.
இதுபற்றி அறிந்த மத்திய அமைச்சர் ராதிகா செல்வி ஜெயக்குமாரின் உடலை உரிய முறையில் கொண்டுவர நடவடிக்கை மேற்கொண்டார்.
உறவினர்கள் செல்வின், தேவக்குமார் ஆகியோர் மும்பை சென்று ஜெயக்குமாரின் உடலை பெற்று விமானம் மூலம் மதுரை எடுத்து வந்தனர். அங்கிருந்து ஆம்புலன்ஸ் மூலம் புதியம்புத்தூருக்கு கொண்டு வந்தனர்.
அங்கு உடலுக்கு தாசில்தார் தமிழ்மணி, மதுரை கோட்ட தொலைதொடர்பு அதிகாரி வீராபாகு உள்ளிட்டவர்கள் அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து ஜெயக்குமாரின் உடல் புதியம்புத்தூரில் உள்ள கல்லறை தோட்டத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
-
தமிழகத்திற்கு வந்த 330 டிஎம்சி காவிரி நீர்! இது புதிய சாதனை.. ஆனா இந்தாண்டு பயங்கர அதிர்ச்சி இருக்கு -
அறிவிப்பு பலகையில் கல்விக் கட்டண விவரங்களை வெளியிட உத்தரவு.. எதிர்த்து தனியார் பள்ளிகள் வழக்கு -
சட்ட விரோத கனிமவள கடத்தல்.. இறங்கி அடிக்கும் முதல்வர் விஜய்! அதிகாரிகளுக்கு பறந்த உத்தரவு -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி












Click it and Unblock the Notifications