வெள்ள நிவாரணம்-கிராம நிர்வாக அதிகாரி சிறைவைப்பு!
வேதாரண்யம்: வேதாரண்யத்தில் வெள்ள நிவாரணம் கேட்டு கிராம நிர்வாக அதிகாரியை பொது மக்கள் சிறை வைத்தனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழையால் தமிழகத்தில் உள்ள பல மாவட்டங்கள் வெள்ளக்காடானது. கடலோர மாவட்டங்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளானது.
தமிழக அரசு பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரணம் வழங்கி வருகிறது.
இந்த நிலையில், வேதாரண்யம் பஞ்சநதிக்குளம் அருகில் உள்ள கிழக்கு கிராமத்தில் கிராம நிர்வாக அதிகாரி முருகையா பாதிக்கப்பட்ட பகுதி மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி வழங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அதே பகுதியில் வசிக்கும் வீடு இல்லாத பொது மக்கள் சிலர் ரேஷன் கார்டு வைத்துள்ளவர்களுக்கும் வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். ஆனால் இதற்கு கிராம நிர்வாக அதிகாரி மறுத்துவிட்டார்.
இதனால் ஆத்திரம் அடைந்த அப் பகுதி மக்கள் கிராம நிர்வாக அதிகாரியை அவரது அலுவலகத்திற்குளே வைத்து பூட்டு போட்டு பூட்டினர். இதனால் அவர் சில மணி நேரம் வெளியே வரமுடியாமல் தவித்தார்.
தன்னை கிராம மக்கள் அலுவலகத்திற்குள் வைத்து பூட்டிய விவரத்தை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு தனது செல் போன் மூலம் தெரிவித்தார்.
அதன் பேரில் ஊராட்சி ஒன்றிய தலைவர் குணசேகரன், மற்றும் வருவாயத்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பொது மக்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி கிராம நிர்வாக அலுவலர் முருகையாவை மீட்டனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications