தீவிரவாதி கஸாவ் போலீஸ் காவல் நீட்டிப்பு
மும்பை: மும்பை தாக்குதலில் ஈடுபட்டு பாதுகாப்புப் படையினரால் பிடிக்கப்பட்ட தீவிரவாத அஜ்மல் அமீர் கஸாவின் போலீஸ் காவல் டிசம்பர் 24ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
கஸாப்பின் காவலை நீட்டிப்பதற்காக மும்பை குற்றப் பிரிவு அலுவலகத்திற்கே நீதிபதி வந்து காவலை நீட்டிக்கும் உத்தரவைப் பிறப்பித்தார்.
கஸாவின் உயிருக்கு ஆபத்து இருப்பதாலும், அவன் மிக மிக முக்கியமான சாட்சியம் என்பதாலும், கஸாப்பை கோர்ட்டுக்கு கொண்டு வருவதில் ரிஸ்க் உள்ளதால், நீதிபதியை குற்றப் பிரிவு அலுவலகத்திற்கு வந்து காவலை நீட்டிக்குமாறு மும்பை குற்றப் பிரிவு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
இதை ஏற்ற நீதிபதி, குற்றப் பிரிவு அலுவலகத்திற்கே வந்து கஸாவின் காவலை நீட்டிக்கும் உத்தரவைப் பிறப்பித்தார்
மும்பை போலீஸ் மற்றும் அமெரிக்க எப்.பி.ஐ அதிகாரிகளால் விசாரிக்கப்பட்டுள்ள கஸாவ் மீது கொலை, சதி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நவம்பர் 27ம் தேதி கஸாவ் போலீஸாரால் பிடிக்கப்பட்டான். அது முதல் அவனை ரகசிய இடத்தில் வைத்து போலீஸார் விசாரித்து வருகின்றனர். தற்போது மேலும் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளதால் கஸாவிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தப்படவுள்ளது. அப்போது தீவிரவாதத் தாக்குதல் குறித்து மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications