தமிழகத்தில் கள்ள நோட்டு புழக்கம் குறைவு: ரிசர்வ் வங்கி
தூத்துக்குடி: பிற மாநிலங்களை விட தமிழகத்தில் கள்ள நோட்டுப் புழக்கம் குறைவாகவே உள்ளதாக ரிசர்வ் வங்கியின் சென்னை மண்டல இயக்குநர் ஜோசப் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடியில் நடந்த சிறப்பு மகளிர் சுய உதவிக் குழு தொடக்க விழா மற்றும் மீனவ உழவர் மன்றத் தொடக்க விழாவில் கலந்து கொண்டு பேசுகையில் இவ்வாறு தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஜோசப் பேசுகையில், ரிசர்வ் வங்கியால் 2005ம் ஆண்டிலிருந்து 1,000, 500 என ரூபாய் நோட்டுகள் பருத்திக்கூழ் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. அவை சட்டைப்பையில் வைத்து தண்ணீரில் நனைத்தாலும் எளிதில் கிழியாது.
ஒரிஜினல் ரூபாய் நோட்டுகளில் எண்கள் ஒரே அளவில், சீரான இடைவெளியில் இருக்கும். காந்தி படம் தெளிவாக தெரியும். கள்ள நோட்டுகளில் அத்தகைய சிறப்புகள் எதுவும் இருக்காது.
உ.பி.,யில் ஒரு வங்கியில் கள்ளநோட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கம் அதிகமாக இல்லை.
இந்தியாவில் கள்ள நோட்டை முற்றிலுமாக புறக்கணிக்க நடவடிக்கை எடுத்து வரும் ரிசர்வ் வங்கி அதற்காக பிரத்யேக அம்சங்களுடன் ரூபாய் நோட்டுகளை தயாரித்து வருகிறது.
ஒரிஜினல் ரூபாய் நோட்டுகளை ஜெராக்ஸ் எடுத்தால் அந்த பேப்பரில் மஞ்சள் வண்ணம் ஏற்படும். அதிலிருந்து நாம் ஒரிஜினல் நோட்டை எளிதில் கண்டுபிடிக்கலாம் என்றார் அவர்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்!












Click it and Unblock the Notifications