பிணைக் கைதிகளைப் பிடித்து பணம் பறிக்க திட்டமிட்டிருந்தோம் - கஸாப் மும்ப
மும்பை: சத்ரபதி சிவாஜி டெர்மினஸில் புகுந்து தாக்குதல் நடத்தி, பலரைப் பிணைக் கைதிகளாகப் பிடித்து பெரும் பணம் பறிக்கத் திட்டமிட்டிருந்ததாக தீவிரவாதி முகம்மது அஜ்மல் அமீர் கஸாப் கூறியுள்ளான்.
இதுதொடர்பாக கஸாப் கொடுத்த வாக்குமூலத்தை மும்பை போலீஸார் வெளியிட்டுள்ளனர். அதில் கஸாப் கூறியுள்ளதாவது ..
மிகவும் பிசியான நேரத்தில் தாக்குதலை நடத்த நாங்கள் பணிக்கப்பட்டிருந்தோம். தாக்குதல் நடத்திய பின்னர் பலரை பிணைக் கைதிகளாகப் பிடிக்கவும் திட்டமிட்டிருந்தோம். பின்னர் மீடியாக்களைத் தொடர்பு கொண்டு பெரும் பணம் கேட்கவும் திட்டமிட்டிருந்தோம். இதுதான் எங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த முக்கிய உத்தரவு, திட்டம்.
சத்ரபதி சிவாஜி டெர்மினஸ் குறித்த படம் ஒன்றும் எங்களது பயிற்சியின்போது காட்டப்பட்டது. அதில் பிசியான நேரத்தில் பயணிகள் அலை மோதும் காட்சிகள் இருந்தன.
முதலில் அங்கு புகுந்து தாக்குதல் நடத்தி விட்டு, பயணிகள் பலரைப் பிடித்து அருகில் உள்ள ஒரு கட்டடத்திற்குக் கொண்டு செல்ல வேண்டும். பின்னர் சாச்சாவை (ஜாகி உர் ரஹ்மான் லக்வியின் செல்லப் பெயராம்) தொடர்பு கொள்ள வேண்டும். அவர் சில மீடியாக்களின் எண்களை எங்களுக்குத் தருவார். அங்கு தொடர்பு கொண்டு நாங்கள் பணம் கேட்டு மிரட்ட வேண்டும் என நாங்கள் அறிவுறுத்தப்பட்டிருந்தோம்.
சத்ரபதி மிஷனில் நானும், இஸ்மாயில் கானும் இடம் பெற்றிருந்தோம். எங்களுக்கு விடிஎஸ் என கோட் கொடுக்கப்பட்டிருந்தது. சாட்டிலைட் வரைபடம் மற்றும் இன்டர்நெட் மூலமாக எங்களுக்கு சத்ரபதி சிவாஜி ரயில் நிலையம் குறித்த முழு விவரமும் தெரிவி்க்கப்பட்டது.
முதலில் செப்டம்பர் 27ம் தேதியே தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்தோம். ஆனால் சில காரணங்களால் அது ரத்து செய்யப்பட்டு விட்டது. நாங்கள் பத்து பேரும் நவம்பர் 23ம் தேதி வரை கராச்சியிலேயே தங்கியிருந்தோம்.
23ம் தேதி லக்வி மற்றும் காபா என்பவருடன் கராச்சியிலிருந்து இரண்டு லாஞ்சுகள் மூலம் கிளம்பினோம். வழியில், நாங்கள் பத்து பேர் மட்டும் அல் ஹூசைனி என்ற படகில் மும்பைக்குப் புறப்பட்டோம்.
படகில் ஏறுவதற்கு முன்பு எங்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு பை கொடுக்கப்பட்டது. அதில் எட்டு கிரேனெடுகள், ஒரு ஏ.கே.47 துப்பாக்கி, 200 காட்ரிட்ஜுகள், 2 மெகஸின்கள், ஒரு செல்போன் இருந்தது என்று கூறியுள்ளான் கஸாப்.
-
தெறித்து ஓடும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்! பாதாளத்திற்கே போகும் இந்திய பங்குச்சந்தைகள்.. 3 காரணங்கள் -
கெத்து காட்டும் இந்தியா.. ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க இந்திய கப்பல்களுக்கு தனிப்பாதை கொடுத்த ஈரான்.. செம -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
2 மாத வாடகை தான் அட்வான்ஸ்.. ஒழுங்கா கட்டலைனா வெளியேற்றலாம்! புதிய வாடகை விதிகள் சொல்வது என்ன -
"பணத்தை கொடுத்துட்டு.. அழுது புலம்புங்க.. நான் கேட்கிறேன்.." வினோத பிஸ்னஸை ஆரம்பித்த இளைஞர் -
ஈரானில் விழுந்த குண்டுகளால்.. இந்தியாவில் உயர்ந்த குடிநீர் விலை.. இன்னும் என்னவெல்லாம் நடக்குமோ! -
வந்தாச்சு LPG ATM.. இனி காத்திருக்கவே வேண்டாம்! வெறும் 2 நிமிடத்தில் புதிய சிலிண்டர் ஈஸியா வாங்கலாம் -
"தேங்க் யூ இந்தியா.. உங்க உதவியை நாங்கள் மறக்கவே மாட்டோம்.." போருக்கு நடுவே நன்றி சொன்ன ஈரான் -
ரம்ஜான் நாளில் களத்தில் இறங்கிய பிரதமர் மோடி.. மேற்காசியாவில் திரும்பும் அமைதி! உற்றுநோக்கும் உலகம்! -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி












Click it and Unblock the Notifications