மும்பை தாக்குதல்-ஐ.நா. வேண்டாம்: அத்வானி
டெல்லி: மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலை ஐக்கிய நாடுகள் சபைக்குக் கொண்டு செல்லக் கூடாது என பாஜக தலைவர் அத்வானி கூறியுள்ளார்.
மக்களவையில் நடந்த விவாதத்தில் பேசிய அவர்,
கடந்த 1950ம் ஆண்டு காஷ்மீர் பிரச்சனையை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலுக்கு, இந்தியா கொண்டு போனதன் விளைவு, இன்னும் சிக்கல் நீடித்து வருகிறது. அதே போன்ற தவறை, மும்பை பயங்கரவாத தாக்குதல் பிரச்சனையிலும் செய்து விடக்கூடாது.
எனவே, இந்தப் பிரச்சனையை ஐ.நாவுக்குக் கொண்டு செல்லும் முடிவை மத்திய அரசு மறு ஆய்வு செய்ய வேண்டும்.
இந்தத் தாக்குதலுக்கு உள்துறை அமைச்சர் மற்றும் மாநில முதல்வர் ஆகிய இருவருக்கு மட்டுமே பொறுப்பு என்று தட்டிக் கழித்து விட முடியாது. பிரதமரை பதவிவிலக வேண்டுமென நாங்கள் வலியுறுத்த மாட்டோம். ஆனாலும், எதிர்வரும் பொதுத்தேர்தலில் மக்கள் இதற்கு தகுந்த தீர்ப்பை வழங்குவர்.
நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தல்களின் தீர்ப்புகளால், பயங்கரவாதம் ஒரு பிரச்னையல்ல என்றாகிவிடாது. டெல்லி மற்றும் ராஜஸ்தானில், பாஜக தோல்வியடைந்ததால், மும்பை தாக்குதல் விவகாரத்தில் மக்களுக்கு கோபம் ஏற்படவில்லை என்று அர்த்தம் அல்ல.
சம்பந்தப்பட்ட மாநிலங்களில் நிலவிய உட்கட்சி பூசலால், பாஜக தோல்வி அடைந்தது. ஆனாலும், காங்கிரஸ் பெற்றிருப்பது வெற்றியல்ல என்றார் அத்வானி.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலைன்னா சும்மாவா.. பாஜக ஆஃபர் தந்தும் ஏற்கலயாமே? இன்று 12 மணிக்கு என்ன நடக்க போகுதோ -
அண்ணாமலை தொடங்கும் புதிய கட்சி.. இணையும் பிரபல பிஸ்னஸ் மேன், திமுக மாஜி அமைச்சர்? அவங்களா? -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலை விலகுகிறாரா இல்லையா.. நாளை உடையும் மர்மம்.. டெல்லியில் நாளுக்கு நாள் உச்சம்பெறும் டிராமா! -
பாஜக பருப்பு இனி வேகாது.. 6 வருஷத்துக்கு பின் அண்ணாமலைக்குத் தெரிந்த உண்மை! உடைத்த ஜோதிமணி எம்பி! -
மோடியை சந்தித்த அண்ணாமலை? மீண்டும் தமிழக பாஜக தலைவராக்க டெல்லி தலைமை திட்டம்? -
மம்தாவிற்கு பேரிடி.. 60 எம்எல்ஏக்களை தொடர்ந்து 20 எம்பிக்களை தூக்கும் பாஜக? காலியாகும் தி.காங்கிரஸ் -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
ஓரங்கட்டப்பட்ட அண்ணாமலை.. நீண்ட நாள் ரகசிய ஆயுதத்தை கையில் எடுக்க முடிவு! அதிரடி திட்டம்












Click it and Unblock the Notifications