சிறுமி கற்பழிப்பு-தம்பி கொலை- குற்றவாளி 6 ஆண்டுக்குப் பின் கைது
சென்னை: சிறுமியைக் கற்பழித்து விட்டு, அவரது தம்பியைக் கொலை செய்து விட்டு தலைமறைவாக இருந்து வந்த கொடூரனை ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் போலீஸார் கைது செய்துள்ளனர்.
நாகை மாவட்டம் சீர்காழி மனோன்மணி நகரில் கடந்த 2002ம் ஆண்டு அக்டோபர் 4ம் தேதியன்று கலைவாணி (12) என்ற சிறுமி தனது தம்பி வெங்கடேசன் (10) மற்றும் ராதா(12) ஆகியோரோடு விளையாடிக் கொண்டிருந்தாள்.
அதே பகுதியில் புதிதாக கட்டப்படும் வீட்டில் கொத்தனாராக குமார் என்ற லெப்ட் குமார் (35) என்பவர் வேலை பார்த்து வந்தார்.
சிறுமிகளைப் பார்த்த லெப்ட் குமார், சிறுமி கலைவாணியிடம் உங்கள் வீட்டில் சிமெண்ட் அள்ளும் இரும்பு சட்டியை வைத்துள்ளேன், அதை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து கலைவாணி பூட்டியிருந்த வீட்டை திறந்துவிட்டாள்.
அப்போது குமார், கலைவாணியை வீட்டுக்குள் தூக்கி சென்று குமார் கொடூரமாக கற்பழித்தார். இதை வெங்கடேசனும், ராதாவும் பார்த்துவிட்டனர்.
இதனால் பயந்து போன குமார், கலைவாணி மற்றும் ராதாவின் கழுத்தை கொடூரமாக அறுத்தார். இதைப் பார்த்து வெங்கடேன் அலறினார். இதனால் வெங்கடேசனின் கழுத்தையும் அறுத்துள்ளார் குமார்.
இதில் துடிதுடித்து வெங்கடேசன் உயிரிழந்தான். கலைவாணியும், ராதாவும் பிழைத்துக்கொண்டனர். 6 ஆண்டுகளுக்கு முன்பு சீர்காழியில் இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
காமக் கொடூரனின் கொலை வெறியிலிருந்து தப்பிய கலைவாணியும், ராதாவும் தற்போது கல்லூரியில் படித்து வருகின்றனர்.
குமார் தப்பி செல்லும்போது கலைவாணியின் வீட்டில் இருந்த நகை, பணத்தையும் கொள்ளையடித்து சென்றுவிட்டார். முதலில் சீர்காழி போலீசார் இந்த வழக்கை விசாரித்தனர். இருப்பினும் குமார் சிக்கவில்லை.
இதையடுத்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. பின்னர் கோர்ட் உத்தரவின் பேரில் வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது.
சி.பி.சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி. அர்ச்சனா ராமசுந்தரம் உத்தரவின் பேரில் குமாரைப் பிடிக்க போலீஸார் புதிய வியூகம் வகுத்தனர்.
தனிப்பட அமைக்கப்பட்டது. இந்தப் படையினரின் வேட்டையில் நேற்று மாலை குமார் சீர்காழியில் சிக்கினார்.
கொள்ளையடித்துச் சென்ற நகைகளையும் சிபிசிஐடி போலீஸார் மீட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications