இந்தியா-பாக் போர் பதற்றம்: டெல்லி விரையும் இங்கிலாந்து பிரதமர்

இந்தியா, பாகிஸ்தான் இரு நாடுகளும் போர் தொடுக்க மாட்டோம் என்று கூறினாலும், படைகளை தயார் செய்ய ஆரம்பித்துள்ளன. இதனால் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் கவலையில் ஆழ்ந்துள்ளன.
மும்பையில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தவுடன் அதை உடனடியாக கண்டித்த பிரெளன் பிரதமர் மன்மோகன் சிங்குடன் தொலைபேசியில் பேசினார். பிரிட்டிஷ் கமாண்டோக்கள், உளவுப் பிரிவினரின் உதவியை வழங்க முன் வந்தார். அதை இந்தியா ஏற்கவில்லை.
இதையடுத்து தீவிரவாத செயல்களை தடுப்பதில் நிபுணத்துவம் பெற்ற போலீஸ் குழு ஒன்றை இந்தியாவுக்கு அனுப்பி வைத்தார்.
மேலும் தீவிரவாத அமைப்புகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு அமெரிக்காவுடன் இணைந்து பிரெளனும் கடும் நெருக்கடி தந்து வருகிறார்.
இதற்கிடையே மும்பைத் தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகளை ஒப்படைக்கும்படி இந்தியா கோரி வருவதை பாகிஸ்தான் ஏற்க மறுத்து வருகிறது.
இதனால் இரு நாடுகளுக்கும் இடையேயும் போர் பதற்றம் நிலவுகிறது. இதை இரு நாடுகளும் மறுத்தாலும் படைகளை அவை தயார் செய்து வருவதை அமெரிக்காவும் பிரிட்டனும் கவலையுடன் உற்று நோக்கி வருகின்றன.
இந் நிலையில், கார்டன் பிரெளன் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் அவசர பயணமாக இந்தியா வருகிறார். பிரெளனின் இந்த வார வழக்கமான நிகழ்ச்சி நிரலில் அவரது இந்தியப் பயணம் இல்லை. எனினும் மும்பைத் தாக்குதல் பற்றி அவர் நேரடியாக பிரதமர் மன்மோகன் சிங்குடன் பேச விரும்புவதால் திடீரென இந்தியா வருகிறார்.
அவர் பாகிஸ்தானுக்கும் கூட செல்லலாம் என்று கூறப்படுகிறது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications