தாயின் கள்ளக்காதல் - பரிதாபமாக பலியான 2 வயது சிறுவன்
நெல்லை: தாயின் கள்ளக்காதலை நேரில் பார்த்து அழுத 2 வயது சிறுவனை, கள்ளக்காதலர்கள் சிகரெட்டால் சூடு போட்டதில் அந்த சிறுவன் ஜன்னி வந்து பரிதாபமாக இறந்தான்.
நெல்லை தச்சநல்லூரை அடுத்த தேனீர்குளம் தெற்குத் தெருவை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன். நெல்லையிலுள்ள ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். முதல் மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அவர் பிரிந்து சென்று விட்டார்.
இதையடுத்து பாலசுப்பிரமணியன் ராஜபாளையததை சேர்ந்த இசக்கியம்மாள் என்பவரை இரண்டாவது திருமணம் செய்தார். இவர்களுக்கு இசக்கியம்மாள், கார்த்திக் என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.இதில் மூத்த மகள் ராஜபாளையத்தில் உள்ள தாத்தா வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில் நேற்று மாலை சிறுவன் கார்த்திக் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தான். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். தச்சநல்லூர் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப்-இன்ஸ்பெக்டர் குருசாமி, ரெங்கராஜன், ஆகியோர் அங்கு சென்று சிறுவன் உடலை கைப்பற்றி நெல்லை அரசு மருத்துக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அவனது உடலில் சிகரெட்டால் சுட்ட காயங்கள் இருந்தன. இது தொடர்பாக இசக்கியம்மாளிடம் விசாரணை நடத்தியபோது பகீர் தகவல்கள் வெளியாகின.
இசக்கியம்மாளுக்கு சங்கரன்கோவில் வாடிக்கோட்டையை சேர்ந்த லாரி டிரைவர் குருசாமி, தூத்துககுடியை சேர்ந்த கிளினர் அம்சா ஆகியோருடன் கள்ளத் தொடர்பு இருந்துள்ளது.
இவர்கள் அடிக்கடி இசக்கியம்மாள் வீட்டிக்கு வந்து சென்றுள்ளனர். கணவர் வேலைக்கு சென்ற நேரத்தில் கள்ளக் காதலர்கள் இருவரும் வந்து இசக்கியம்மாளுடன் ஒன்றாக இருந்துள்ளனர். இதைக் கண்ட சிறுவன் கார்த்திக் அழுதுள்ளான்.
இதனால் ஆத்திரமடைந்த குருசாமி, அம்சா ஆகியோர் சிகரெட்டால் அவனது உடலில் சூடு போட்டுள்ளனர். அலறி துடித்த அவன் மயங்கி விழுந்துள்ளான். இசக்கியம்மாள் இதனை கண்டு கொள்ளவில்லை. சிறிது நேரத்தில் கார்த்திக் ஜன்னி கண்டு இறந்தான்.












Click it and Unblock the Notifications