அடக்கம் செய்யப்பட காத்திருக்கும் தீவிரவாதிகளின் உடல்கள்
மும்பை: மும்பைத் தீவிரவாதத் தாக்குதலின்போது கமாண்டோக்களால் சுட்டுக் கொல்லப்பட்ட 9 தீவிரவாதிகளின் உடல்களும், அடக்கம் செய்ய இடம் கிடைக்காமல் 3 வாரங்களாக மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன.
மும்பை தீவிரவாதத் தாக்குதலை மேற்கொண்டு பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட 9 தீவிரவாதிகளின் உடல்களையும் அடக்கம் செய்ய இடம் தர மாட்டோம் என மும்பையைச் சேர்ந்த பல்வேறு முஸ்லீம் அமைப்புகள் கூறி விட்டன. இதனால் உடல்களை அடக்கம் செய்ய மயானம் கிடைக்கவில்லை.
அதேசமயம், இவர்களை பாகிஸ்தானியர் என அந்நாட்டு அரசும் அங்கீகரிக்க மறுத்து, உடல்களைப் பெற முன் வராமல் இருக்கிறது.
இதனால் கடந்த 3 வாரங்களாக 9 பேரின் உடல்களும் மருத்துவமனைகளில் வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இதுதொடர்பாக பாகிஸ்தான் தூதரகத்தை அணுகி உடல்களைப் பெற்றுக் கொள்ள ஏற்பாடு செய்யுமாறு கோரி மத்திய வெளியுறவு அமைச்சகத்திற்கு மும்பை காவல்துறை சார்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது.
தற்போது 9 உடல்களும் ஜேஜே மருத்துவமனை பிணவறையில் வைக்கப்பட்டுள்ளது.
மும்பை தாக்குதலில் ஈடுபட்டவர்கள் பாகிஸ்தானியர் அல்ல என்று தொடர்ந்து பிடிவாதமாக கூறி வருகிறது பாகிஸ்தான். உயிருடன் பிடிபட்ட கஸாப், தான் பாகிஸ்தானி என்பதை தானே விவரித்து பாகிஸ்தான் தூதரகத்திற்குக் கடிதம் எழுதியும் கூட அதையும் ஏற்றுக் கொள்ள முன்வரவில்லை அந்த நாடு.
9 பேரின் உடல்களையும் யாரும் பெற முன்வராவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்று மும்பை போலீஸ் கமிஷனர் ஹசன் கபூரிடம் கேட்டபோது, யாரும் வராவிட்டால், சட்டத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகளின்படி உடல்கள் அப்புறப்படுத்தப்படும் என்றார்.
உடல்களை யாரும் பெறாவிட்டால், மும்பை போலீஸாரே தங்களது சொந்த செலவில் அடக்கம் செய்வார்கள் எனத் தெரிகிறது.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications