கஸாப்புக்காக வாதாட தயார்: முன்னாள் அட்வகேட் ஜெனரல்
மும்பை: மும்பைத் தீவிரவாதத் தாக்குதலின் போது சிக்கிய முகம்மது அஜ்மல் அமீர் இமான் கஸாபுக்காக வாதாடத் தயார் என மகாராஷ்டிர மாநில முன்னாள் கூடுதல் அரசு வழக்கறிஞர் பி. ஜனார்த்தன் கூறியுள்ளார். அப்படிச் செய்யாவிட்டால் அது மனித உரிமை மீறல் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கஸாப்புக்காக வாதாட வக்கீல்கள் யாரும் இதுவரை முன்வரவில்லை. இந்த நிலையில் அவருக்காக வாதாட ஜனார்த்தன் முன்வந்துள்ளார்.
பாகிஸ்தான் தூதரகம் தன்னை அணுகினால் நிச்சயம் கஸாப்புக்காக வாதிடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், மகாராஷ்டிர மாநில அரசு நடுநிலையான விசாரணையை உறுதி செய்ய வேண்டும். குற்றம் சாட்டப்பட்டுள்ள கஸாப்புக்கும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும். அப்படிச் செய்யாவிட்டால் அது மனித உரிமை மீறலாகப் போய் விடும்.
மனித உரிமை மீறல் நடந்து விடாமல் மாநில அரசு பார்த்துக் கொள்ள வேண்டும். அதனால்தான் கஸாப்புக்காக வாதாட நான் முன்வந்துள்ளேன். ஆனால் பாகிஸ்தான் அரசு என்னை அணுகி கேட்டுக் கொண்டால் மட்டுமே கஸாப்புக்காக நான் ஆஜராவேன்.
அஜ்மல் கஸாப் கையும் களவுமாக பிடிபட்டுள்ளார். எனவே தன்னைத் தற்காத்துக் கொள்ள அவருக்கு அதிகம் வாய்ப்பில்லை. அதேசமயம், கிரிமினல் சட்டப்படி, குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவரும் வக்கீல் வைத்துக் கொண்டு தனது தரப்பு வாதத்தை எடுத்து வைக்க உரிமை உண்டு என்றார் ஜனார்த்தன்.
முன்னதாக, பாம்பே பெருநகர மாஜிஸ்திரேட் கோர்ட் வக்கீல்கள் சங்கம், கஸாப்புக்காக எந்த வக்கீலும் ஆஜராகக் கூடாது என்று கோரி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது என்பது நினைவிருக்கலாம்.
-
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications