சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுர வாசல்கள் மீண்டும் திறப்பு
சிதம்பரம்: மும்பை தாக்குதலை அடுத்து பாதுகாப்பு கருதி மூடப்பட்ட சிதம்பரம் நடராஜர் கோவில் கோபுர வாயில்கள் மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.
டெல்லி, பெங்களூரு, அகமதாபாத், அஸ்ஸாம் ஆகிய இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புகள் மற்றும் மும்பை தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து கடந்த செப்டம்பர் மாதம் 27-ம் தேதி முதல் சிதம்பரம் நடராஜர் கோவிலின் மூன்று கோபுர வாயில்களும் அடைக்கப்பட்டன.
பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய கீழ கோபுர வாயில் வழியாக மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
மேலும், கோவிலில் மெட்டல் டிடெக்டர் வாயில் அமைக்கப்பட்டு, தீவிர சோதனைக்கு பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வந்தனர்.
பக்தர்கள் நலன் கருதி அனைத்து கோபுர வாயில்களையும் திறக்க வேண்டும் என நடராஜர் கோவில் பக்தர்கள் பேரவை சார்பில் ஆர்.டி.ஓ-விடம் மனு அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன், மூடப்பட்ட கோபுர வாயில்களை திறக்க முடிவு செய்யப்பட்டது.
அதன்படி நடராஜர் கோவிலின் அனைத்து வாயில்களும் திறக்கப்பட்டது.
-
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications