டெல்லி தோல்வி-பாஜக எம்பி மல்ஹோத்ரா ராஜினாமா

பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவர் மல்ஹோத்ரா. சமீபத்தில் முடிந்த டெல்லி சட்டசபைத் தேர்தலில் பாஜக சார்பில் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் தேர்தலில் பாஜக பெரும் தோல்வியைச் சந்தித்தது.
இத் தேர்தலில் கிரேட்டர் கைலாஷ் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார் மல்ஹோத்ரா. இதையடுத்து சட்டசபை உறுப்பினர் பதவியை வைத்துக் கொள்ள தீர்மானித்தார் மல்ஹோத்ரா. இதைத் தொடர்ந்து இன்று தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
தனது கடிதத்தை சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜிக்கு அனு்பி வைத்துள்ளார் மல்ஹோத்ரா.
மல்ஹோத்ரா, லோக்சபா பாஜக நாடாளுமன்றக் கட்சியின் துணைத் தலைவராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மல்ஹோத்ராவை முதல்வராக அறிவித்ததால் தான் டெல்லி சட்டமன்றத் தேர்தலில் படுதோல்வி ஏற்பட்டதாக பல்வேறு பாஜக தலைவர்களே கருத்துத் தெரிவித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு டெல்லி தேர்தல் பொறுப்பாளரான அருண் ஜேட்லி மட்டுமே ஆதரவாக உள்ளார். இந்தத் தோல்வியைத் தொடர்ந்து ஜேட்லிக்கும் கட்சியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications