பெண் ரெளடி கொலையில் 2 தம்பிகள் கைது

அடிதடி, கட்டப் பஞ்சாயத்து, கொலை முயற்சி என ஏகப்பட்ட வழக்குகளைக் கொண்ட பெண் தாதா' பரமேஸ்வரி நேற்று முன் தினம் இரவு கொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் அவரது தம்பிகள் செல்வராஜ் (30), தம்பித்துரை (28) மற்றும் கூலிப் படையை சேர்ந்த காமராஜ் (20), கோபி (26) ஆகியோரை இன்று காலை கைது செய்தனர்.
செல்வராஜ், தம்பித்துரை ஆகியோர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்,
பரமேஸ்வரிக்காக பல முறை நாங்கள் ஜெயிலுக்கு சென்று வந்துள்ளோம். அவர் கை காட்டிய இடத்தில் எல்லாம் அடிதடியில் இறங்கியுள்ளோம்.
அவருக்கு சொந்தமாக 10 ஓர்க் ஷாப்புகள் உள்ளன. இங்குள்ள லாரி செட்களில் லோடு இறக்குவதற்கு என்று நூற்றுக்கணக்கில் ஆட்களை அனுப்புவார். அவர்களிடம் இருந்து தினந்தோறும் ஏராளமான பணம் மாமூலாக பெறுவார். யாராவது பணம் தர மறுத்தால் அவர்களை அடித்து உதைப்பார். தினமும் குடித்து விட்டு எங்களுடன் ரகளை செய்வார்.
அவருக்கு வருமானம் பல வகையிலும் பெருகியது. ஆனால், எங்களுக்கு சரியாக பணம் தருவதி்ல்லை. தனது மகன் தன்ராஜுக்கே எல்லா பணத்தையும் தந்து வந்தார்.
லாரி செட்டுக்கு வேலைக்கு செல்லும் ஆட்களிடம் பெறும் மாமூல் பணத்தில் பங்கு கேட்டோம். இதற்காக எங்களையே ஆள் வைத்து அடித்து உதைத்தார். கொலை செய்து விடுவேன் என மிரட்டினார்.
பரமேஸ்வரி முந்தி கொண்டு எங்களை கொல்வதற்குள் அவரை தீர்த்துக் கட்டிவிட்டோம். காமராஜ், கோபி ஆகிய 2 பேரையும் துணைத்து வைத்துக் கொண்டு பரமேஸ்வரியை கொலை செய்தோம்.
இதற்காக அவர்களுக்கு ரூ.2,000 கூலி பேசினோம். சம்பவத்தன்று இரவு பரமேஸ்வரி மது அருந்திவிட்டு போதையில் கிடந்தார்.
அதிகாலையில் கோபியும், காமராஜூம் தலையணையால் பரமேஸ்வரியின் முகத்தில் அமுக்கி மூச்சு திணறலை ஏற்படுத்தினர். நாங்கள் 2 பேரும் கத்தியால் அவரது கழுத்தை அறுத்தோம்.
பின்னர் ஒன்றும் தெரியாதவர்கள் போல அருகிலேயே படுத்து கொண்டோம். காலையில் அவரது உடலை மருத்துவமனைக்குக் எடுத்து செல்லும் வரை அங்கேயே இருந்தோம் என்றனர்.
4 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications