கிளாஸ்கோ தீவிரவாத தாக்குதல் - ஈராக் டாக்டருக்கு ஆயுள் தண்டனை
லண்டன்: கிளாஸ்கோ விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தீவிரவாதத் தாக்குதலில் கைதான ஈராக் டாக்டர் பிலால் அப்துல்லாவுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிலால் அப்துல்லாவும், இந்திய டாக்டரான கபீல் அகமதவும் கடந்த ஆண்டு ஜூன் மாதம் கிளாஸ்கோ விமான நிலையம் மீது வெடிகுண்டுகளை நிரப்பிய காருடன் சென்று தாக்குதல் நடத்தினர்.
இதில் கபீல் அகமது படுகாயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மரணமடைந்தார்.
அவருடன் கைதான பிலால் அப்துல்லா மீது உல்விச் கிரவுன் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடந்து வந்தது.
இந்த வழக்கில் பிலால் அப்துல்லாவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி காலின் மாக்கே தீர்ப்பளித்தார்.
பிலால் அகமது மீது சுமத்தப்பட்ட இரு குற்றச்சாட்டுக்களிலும் குறைந்தது தலா 32 ஆண்டு சிறைத் தண்டனையை அவர் அனுபவிக்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.
பிலால் அகமது மீதான குற்றச்சாட்டுக்கள் நிரூபனமாகியுள்ளதாகவும், அவர் மிகவும் அபாயகரமான மனிதர் எனவும் நீதிபதி தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருந்த ஜோர்டான் நாட்டு டாக்டர் முகம்மது அஸா, விடுதலை செய்யப்பட்டார். இருப்பினும் அவரை ஜோர்டானுக்கே நாடு கடத்துமாறு கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
சீனாவை சுற்றி வளைக்கும் இந்தியா.. இதுதான் ரியல் மாஸ்டர் பிளான்.. இனிமேல் தான் இருக்கு ஆட்டமே -
ஒட்டுமொத்த தலைநகரையும் கையில் எடுத்த ராணுவம்! பாகிஸ்தானில் ஓவர்நைட்டில் எல்லாம் மாறிடுச்சு.. பதற்றம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications