மும்பை எதிரொலி: பிரதீபா பாட்டீலின் பிறந்த நாள் ரத்து
டெல்லி: மும்பை தாக்குதல் சம்பவம் எதிரொலியாக குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் தனது பிறந்த நாள் கொண்டாட்டங்களை ரத்து செய்துள்ளார். அதற்குப் பதிலாக அனாதை இல்லங்களுக்கு அவர் பழம், காய்கறிகளை அனுப்புகிறார்.
குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு இன்று 74வது பிறந்த நாளாகும். ஆனால் மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தைத் தொடர்ந்து தனது பிறந்த நாளை கொண்டாடுவதில்லை என்று பிரதீபா பாட்டீல் முடிவு செய்துள்ளார்.
அதற்குப் பதிலாக குடியரசுத் தலைவர் மாளிகையில் உள்ள தோட்டத்தில் விளையும் பழங்கள், காய்கறிகளை பத்து அனாதை இல்லங்களுக்கு அவர் அனுப்பி வைக்கிறார் என்று குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
முன்னதாக ஆறு நாட்டு தூதர்கள் பொறுப்பேற்பு குடியரசுத் தலைவர் மாளிகையில் நேற்று நடந்தது. இதில் பேசிய பிரதீபா பாட்டீல், தீவிரவாதிகளுக்கு தொடர்ந்து பாதுகாப்பு கிடைத்து வருகிறது. அவர்களுக்கு பயிற்சியும், ஆதரவும் தங்கு தடையின்றி கிடைத்து வருகிறது. தொடர்ந்து நடைபெறும் தீவிரவாத சம்பவங்கள் இதை நிரூபிக்கின்றன.
அனைத்து நாடுகளும் தீவிரவாதத்திற்கும், தீவிரவாதிகளுக்கும் எதிராக கடுமையாக செயல்பட வேண்டும். அவர்களுக்கு உறுதியான எச்சரிக்கையை அனுப்ப வேண்டும். எந்தப் பகுதியிலிருந்தும் அவர்களுக்கு ஆதரவு கிடைக்காது என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றார் பாட்டீல்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக!












Click it and Unblock the Notifications